வெளிப்பார்வைக்காக மதக் கிரியைகளில் ஈடுபடாது உண்மையான தர்மத்தின் கருத்துக்களால் எமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வோம். முன்மாதிரிமிக்க வகையில் ஏனைய மதங்களையும் கலாசாரங்களையும் மதித்து சகவாழ்வு வாழ்வதற்கு எம்மை தயா ர்படுத்திக்கொள்வோம்.
அனைத்து உள்ளங்களும் தெளிவுபெறக்கூடிய பக்திகமழும் பொசன் பண்டிகையாக அமையப் பிரார்த்திக்கின்றேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொசன் தினத்தை முன்னிட்டு வெளியி ட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கீழைத்தேயத்தில் தோன்றிய மிகச் சிறந்தஆன்மீகத் தத்துவத்தை எமது தாய் நாட்டின் உரிமையாக அன்பளிப்புச் செய்த புனித தினமாக நாம் பொசன் போயாதினத்தை கொண்டாடுகின்றோம். அசோக மன்னனின் தர்ம தூதுப் பணியின் முக்கிய அம்சமாக மஹிந்த தேரர் உட்பட்ட தூதுக்குழுவினர் பௌத்த தர்மத்தை இந்த நாட்டிற்கு அன்பளிப்புச் செய்தமையானது எமது தேசத்தினதும் கலாசாரத்தினதும் புதியதொருயுகம் ஆரம்பமாகிய வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்வாகும்.
அடிமைத் தனமற்ற சிந்தனை, அஹிம்சை, கருணை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட புனித பௌத்த தர்மமானது வேட்டையாடச் சென்றிருந்த மன்னன் தேவநம் பியதீசன் உட்பட முழு இலங்கை மக்களையும் மும்மணிகளின் ஆசியைவேண்டிநிற்கும் பக்திமிக்க மக்களாக மாற்றியமைப்பதில் வெற்றிகண்டது. பௌத்த தர்மத்தின் மூலம் ஏற்பட்ட புத்துயிர்ப்பானது மனிதர்களின் உள்ளத்துடன் மட்டும் வரையறுக்கப்படாமல் நாட்டின் ஆட்சித்துறை, இலக்கியத்துறை, விவசாயத் துறை, நீர்ப்பாசனத் துறைபோன்றதுறைகள் உட்பட நாடுமுழுவ தும் வியாபித்தது.
பௌத்த தர்மத்தைப் பரப்புவதற்காக உலகில் எந்தவொரு இடத்திலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை. ஏனைய மதங்களுக்கும் கலாசார ங்களுக்கும் மதிப்பளித்து சகவாழ்வு வாழ்வதற்குப் பொருத்தமான சூழலை உருவாக்கும் மதங்கள் மற்றும் மார்க்கங்களிடையே பௌத்த தர்மம் தனித்துவமானதாக விளங்குகின்றது.
ஆனாலும்,தீவிரவாதக் கருத்துக்கள்,பொறுப்பற்றசெயற்பாடுகள், வன்முறை நடவடிக்கைகள் காரணமாக அண்மைக்காலங்களில் பௌத்த மதத்தின் தார்மீக சிந்தனைகள் மற்றும் கருணையை அடிப்படையாகக் கொண்ட அஹிம்சைப் போக்கு என்பன சவாலுக்குட்பட்டிருப்பது கவலைப்படவேண்டிய விடயமாக இருக்கின்றது.
இந்தநிலைமையை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது எம்மனைவரினதும் பொறுப்பாகும்.