வவுனியா புதிய வேலர் சின்னக்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வவுனியா பன்றிக்கெய்த குளம் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயதுடைய ஜெ. பவித்திரா என்பவரே அவரது வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தாய் அண்மையில் அரபு நாடொன்றில் இருந்து இலங்கை திரும்பியிருந்த நிலையில் மீண்டும் அரபு நாட்டிற்கு செல்ல பொலிஸ் நிலையத்தில் சான்றிதழொன்றினை பெற சென்ற சமயமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவ இடத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.