எப்போது மாறும் மக்கள் பிரதிநிதிகளின் கையாலாகாதனமும் தொடர்ந்தும் தம்மை ஏமாற்றும் கட்சியினருக்கு வாக்குப்போடும் மக்களின் ஏமாளித்தனமும்? – உலமா கட்சித் தலைவர் !

எம்.வை.அமீர்

அம்பாரை மாவட்டத்தின் கொளனி மற்றும் நற்பிட்டிமுனை போன்ற பிரதேசங்களில் காணப்படும் குடி நீர் பிரச்சினைக்கு மக்கள் வாக்குகள் பெற்ற அரசியல்வாதிகளின் கையாலாகா தனமே காரணமாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவதுஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

moulawi-mubarak-01

மழைகாலம் வந்தால் கிட்டங்கி ஆறு நிறைந்து ஊருக்குள் வெள்ளம் புகுவதும் கோடை காலம் வந்தால் நீர்வற்றுவதும் சுமார் நாற்பது வருட கால பிரச்சினையாகும். இங்கினியாகலையிலிருந்து வரும் நீர் கிட்டங்கி வழியாக கடலை சென்றடைகிறது. இந்நீர் மழை காலங்களில் வயல்களில் பரவுவதால் இரு போகம் நெற்செய்கை பண்ணக்கூடிய காணிகள் ஒரு போகமே செய்யப்படுகின்றன. அதே போல் அந்நீர் ஊர்களுக்குள் செல்வதால் நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. அதே போல் மாவடிப்பள்ளி பாலமும் நிறைந்து மக்கள் போக்கு வரத்து செய்ய முடியாமலும் தவிப்பதை காணலாம்..

இதனை சீர் செய்யுமுகமாக நாம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அமைச்சராக இருந்த காலம் முதலே சொல்லி வருவதோடு இதற்கான மாற்று திட்டத்தையும் முன் வைத்து வருகிறோம். சம்மாந்துறை, கல்முனை தொகுதிகளில் கடந்த 25 வருடங்களாக முஸ்லிம் காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும்,மாகாண சபையிலும் இருந்தும் கூட இப்பிரச்சினை தொடர்கிறது என்றால் இதற்கு இத்தகைய மக்கள் பிரதிநிதிகளின் கையாலாகாதனமும் தொடர்ந்தும் தம்மை ஏமாற்றும் கட்சியினருக்கு வாக்குப்போடும் மக்களின் ஏமாளித்தனமுமே காரணமாகும்.

அம்பாரை மாவட்டத்து அபிவிருத்திக்கென கடந்த அரசில் பெசில் ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட 250 கோடி ரூபாவில் ஒரு சதம் கூட இப்பிரச்சினைக்கு செலவிடப்படவில்லை என்பதன் மூலம் மக்கள் எந்தளவுக்கு மோசமாக ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தற்போது முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே அம்பாரை மாவட்டத்தின் ஆளுங்கட்சியாக உள்ளது. அதன் தலைவர் நீர்வழங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்தும் மக்களின் நீர்ப்பிரச்pனை தீர வில்லை என்றால் தமது பிரதேசம் பற்றித்தெரியாத, அதற்கு கொஞ்சமும் தொடர்பற்ற ஒரு தலைமையை கொண்ட கட்சிக்கு மக்கள் வாக்களிப்பதும் காரணமாகும். கல்முனை தலைமை கொண்ட முஸ்லிம் கட்சி பாராளுமன்றத்தில் இருக்குமாயின் இத்தகைய பிரச்சினைகளை நாமாகவே தீர்த்திருக்க முடியும்.

ஆகவே, இம்மக்கள் எதிர் நோக்கும் குடிநீர், வெள்ள பிரச்சினைகளை தீர்க்க ஆளுங்கட்சியில் அம்பாரை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் முன் வரவேண்டும்.  இதனை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கான கருத்தரங்குகள் ஆளணி மற்றும் பண பலம் உள்ள கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்தால் அதில் உலமா கட்சியின் திட்டத்தை முன் வைக்கவும் நாம் தயாராக இருக்pறோம். அப்படியும் இல்லாவிட்டால் எதிர் வரும் தேர்தல்களில் இவர்களுக்கு பாடம் படிப்பிக்கு முகமாக கல்முனை தலைமை கொண்ட முஸ்லிம் கட்சியை ஆதரிக்க மக்கள் முன்வர வேண்டும். இல்லாவிடில் மக்களின் புலம்பல் தொடர் கதையாவது தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.