அட்டன் கொழும்பு பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டியொன்று மீட்பு

க.கிஷாந்தன்

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்டப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் 22.04.2017 அன்று சிறுத்தை குட்டியொன்று உயிரிழந்த நிலையில் பிரதான வீதியின் மருங்கில் காணப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வீதியில் வாகனங்கள் அதிகமான சேவையில் ஈடுப்பட்டிருக்கும் இந்த நிலையில் சந்தேகத்திற்கிடமாக இந்த சிறுத்தை குட்டி உயிரிழந்திருப்பதை பொது மக்கள் சந்தேகிக்கின்றனர்.

அண்மைக்காலமாக மலையகத்தின் பெருந்தோட்டப்பகுதிக்குள் காட்டு விலங்குகள் உளாவும் நிலை தொடர்ந்து வருகின்றது.

காடுகளுக்கு தீ பரவும் நிலை, வரட்சி இதன் காரணமாக காடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் இந்த நிலையில் காட்டு விலங்குகள் பெருந்தோட்ட பகுதிகளில் குப்பை கூழங்களை நாடி உணவுக்காக படையெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

சில தோட்டப்பகுதிகள் பிரதான வீதியின் அண்மித்த பகுதியில் காணப்படுவதானல் காட்டு விலங்குகள் பிரதான வீதியை தாண்டியே பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருகின்றது.

இந்த நிலையில் சிறுத்தைகள், காட்டு பன்றிகள் என அனேகமான மிருகங்கள் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருவதனால் பிரதான வீதியை கடக்கும் பொழுது வாகனங்களில் மோதுண்ட நிலையில் காட்டு மிருகங்கள் சில உயிரிழந்து போகும் சம்பவங்கள் அண்மைக்காலமாக மலையக்தில் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் உயிரிழந்த சிறுத்தை குட்டியும் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.