அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான சகோதரர் றிஷாட் பதியுத்தீன் மக்களுக்குச் செய்கின்ற நல்ல காரியங்களை மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் சிலர் கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதியதியாக இருந்த வேளை கிராண்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினையின் போது உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்து பொலிஸாரின் செயற்பாடுகளை விமர்சித்து பொலிஸ்மா அதிபரையே பதவி விலகுமாறு சூளுரைத்தவர். 92% மாற்று மதத்தினர் வாழும் இந்த நாட்டில் 8% வீதமாக முஸ்லிம்கள் உள்ள நிலையில் வன்னி மகனின் சதை துடித்து இரத்தம் கொதித்து நின்றதை யாரும் மறக்க முடியாது.
அளுத்கம நகரம் பற்றி எரியும் வேளை அக்கரைப்பற்றிலிருந்து எமது மனம் துடித்த போது நினைவுக்கு வந்த றிஷாட் பதியுதீனிடம் கைத்தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்ட போது; வன்னி மகன் ஸ்தலத்தில் நின்று கொண்டிருந்தார் , ஷா எவ்வளவு வேகம்.
அளுத்கமவில் அன்றிரவு வெள்ளி முளைத்து சூரியன் வந்து சாயும் வரை பிரபல்யமிக்க அன்றைய அமைச்சர்கள் எவரையும் அங்கு காணவில்லை. ஆறி அமரப் போன அமைச்சர்களை மக்கள் புறக்கணித்தனர். அமைச்சர் றிஷாட் பதியுத்தீனைத் தவிர மற்ற எல்லோருமே ஓரளவுக்கு நழுவி வந்து விட்டனர்.
1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகளை முடித்து விட்டு அம்பாரை கச்சேரியில் இருந்து ஊருக்குள் (அக்கரைப்பற்று) நுழைந்த போது திடீர் மழை. இடது பக்கம் திரும்பிப் பார்த்தேன். தேசிய கல்லூரி மைதானம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. மழை வேண்டித் தொழுத மக்கள் எல்லையில்லாத மகிழ்ச்சியினால் மழையில் இயல்பாகவே எல்லோருமாக நனைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்|எமது பிரதேசத்தில் தொடராக மழை பெய்யத் தொடங்கின. விவசாயிகளுக்குக் கொண்டாட்டம். ஊருக்கும் மகிழ்ச்சி. இதே போன்று அண்மையில் இக்கினியாக்கலையிலும் மழை வேண்டித் தொழுகை. கைமேல் பலன்.
கீழ்ப்பந்திக்கு மேல் பந்தி தேவையாக இருப்பதனால் பதிவிட்டேன்.
அண்மையில் வாங்காமம் கந்தூரிச்சோறு விஷமாகி இறக்காம மக்கள் பட்ட துயரம் நம் எல்லோருக்கும் தெரியும்.
வில்பத்து பிரச்சனையில் முறுக்கேறிய நெஞ்சத்துடன் இறக்காமம் மக்களின் துயர் துடைக்க ஹெலி மூலம் பறந்து வந்து அந்த ஊர் மக்களுக்கு அமைச்சரி றிஷாட் செய்த உதவிகள் தாகித்த, பசித்த மக்களுக்கு பிரார்த்தனை மழை போல் ஆனது. றிஷாடின் உதவி மழை மக்கள் மனங்களிலெல்லாம் மண் வாசனையை கிளப்பி புழுதி வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த நாட்களில் மனதை கவலையில் துவைத்தெடுத்த இறக்காமம் வயோதிபர் ஒருவர் ஒரு பாட்டைப் பாடினார்.
றிஷாட் தம்பி ……… றிஷாட் தம்பி
உன் செயலைப் போற்றுகின்றேன். நீ
ஒருவன் மட்டும் துணையிருந்தால் – இன்ஷா அல்லாஹ்
ஊரை மாற்றுகின்றேன் சபாஷ் தம்பி
கொடியவர் உன்னை எதிர்கையிலே
குறுக்கே வரலாம் வரும் புயலே.
வருவது வரட்டும் தம்பி. நீ
வென்று காட்டுவாய் பார் தம்பி.
றிஷாட் தம்பி ……… றிஷாட் தம்பி
உன் செயலைப் போற்றுகின்றேன். நீ
ஒருவன் மட்டும் துணையிருந்தால் – இன்ஷா அல்லாஹ்
ஊரை மாற்றுகின்றேன். றிஷாட் தம்பி.
காலம் வந்தது பொறு தம்பி. நீ
கவலைப்படாமல் இரு தம்பி.
காத்திருந்தாலென்ன தம்பி – உன்னை
காப்பாற்றிவிடுவோம் தம்பி.
றிஷாட் தம்பி ……… றிஷாட் தம்பி !
என்றவாறு ஊரெல்லாம் பாடிக் கொண்டிருந்தார்.
மக்கள் உணர்வுகளை மதிக்காத மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் சிலர் தமது தலைவனின் தோல்வியின் தொடை நடுக்கத்தைப் பார்த்து ஏதேதோ உளறுகின்றனர்.
இந்த ஏப்ரல் முற்பகுதியில் அம்பாரை மாவட்டத்தில் 06 ஊர்களில் சதொச விற்பனை நிலையங்களையும் அமைச்சர் றிஷாட் திறந்து வைத்தார். இதன் மூலம் இன, மத பேதமின்றி சுமார் நூறு இளைஞர் யுவதிகளுக்காவது தொழில் வாய்ப்புக் கிடைத்திருக்கும். இது இப்படி இருக்க றிஷாட் கடை திறக்கின்றார் என்று சில லக்டோஜன் பாப்பாக்கள் நையாண்டி பண்ணுகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் அம்பாரை மாவட்டம் ஒலுவிலுக்கு வந்த அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களை ஒலுவில் கிராமத்து சுய தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்கள் தமது தொழில் விருத்தி தொடர்பாக உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவரும் அங்கு சென்று பார்வையிட்டார். அது கற்பன் செடி உற்பத்தி. வீட்டு வளவுக்குள் ஒரு பகுதியில் நடப்பட்டிருந்தது.
அமைச்சர் பார்வையிட்ட பன்கள் எல்லாவற்றையும் சேர்த்தால் 10 பாயும் இழைக்கக் காணாது. இந்தத் தொழிலைத் தான் அந்த சகோதரிகள் அபிவிருத்தி செய்து தருமாறு கேட்டிருந்தார்கள்.ஒரு பிரதேச சபை உறுப்பினரால் தராளமாகச் செய்யக்கூடிய விடயம்தான் இது. முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் நிலை இதுதான். இதை நாங்கள் சொல்ல வந்தால் மு.கா தலைவர் மேடை போட்டுக் கூறுவார் ஊடகவியலாளர்கள் கூலிக்கு எழுதுகிறார்கள் என்று. நாம் ஒப்பிட்டு ரீதியில்தான் இவற்றை இங்கு பதிவிடுகின்றோம். மக்களின் மனநிலையை அறிந்து தான் இதைக் கூறுகின்றோம். நாம் பிழையாகக் கூறினால் அது ஊடக தர்மமாகாது என்பது எமக்குத் தெரியும். இப்போது இந்தக் கருத்தை விமர்சிக்கும் யாராவது ஒரு சகோதரர் இருந்தால்; சதாச நிறுவனங்களின் கிளை நிலையங்களின் திறப்பு விழாக்களையம் கற்பன் உற்பத்தி பயிர்ச் செய்கை தொடர்பான விடயங்களின் ஏற்றத் தாழ்வுகளை மலைக்கும் மடுவுக்கும் உள்ளதாக இருப்பதை யாரும் கண்டு கொள்ளலாம். பன் உற்பத்தி தொடர்பான புகைப்படங்கள், செய்திகள் என்பன வீரகேசரி பத்திரிகை உட்பட இன்னும் சில பத்திரிகைகளிலும் சமூக வலயத்தளங்களிலும் கூட பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாசம் ஆறு கடந்தும் பன் உற்பத்திக்கான அபிவிருத்தி வேலைக்கு என்ன நடந்தது என்ரே தெரியாது. அமைச்ர் தான் சொல்ல வேண்டும். வாக்கு கொடுப்பதில் மு.கா.தலைவருக்குத் தானே எதுவித பஞ்சமுமில்லை. வாக்களித்த மக்களுக்குத் தானே எல்லாப் பஞ்சமும்.
சிங்கள கிராமப் பிரதேசங்களிளல் ஒரு கதை இருக்கிறது. பள்ளு பிதுரு கண்ண நே கொனாடத் கண்ண தென்னத் நே!
நாய் வைக்கோலைத் தின்பதுமில்லை. மாட்டைத் தின்ன விடுவதுமில்லை. –
வைக்கல் பட்டறை நாய் போல கதைதான் இது. செய்வதுமில்லை செய்பவைனை விடுவதுமில்லை.
காலாபூஷணம்
கலை இலக்கிய வித்தகர்
மீரா எஸ். இஸ்ஸடீன்