ஐ.பி.எல். சீசன் 10-ன் 23-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை சேர்த்தது. கொல்கத்தா சார்பில் உத்தப்பா 72 (48) ரன்களும், நரேன் 42 (17), காம்பீர் 33 (28), மணீஷ் பாண்டே 24 (21) ரன்கள் எடுத்தனர்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிஞ்ச் – மெக்கல்லம் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர் விளாசிய பிஞ்ச் 31 ரன்கள் எடுத்திருந்த போது கோல்டர்-நைல் பந்தில் மணீஷ் பாண்டேயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து 17 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சர் விளாசிய மெக்கல்லம் 31 ரன்கள் எடுத்திருந்த போது கிறிஸ் வோக்சிங் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேற பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரெய்னா 86 (46) ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து குஜராத் லயன்ஸ் 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மேலும் கொல்கத்தாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.