(வீடியோ) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா புதிய நிருவாகத்தின் கீழ் விஷேட தேவையுடையோர் பாடசாலை

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

 

(வீடியோ ) புதிய நிருவாகத்தின் தெளிவுபடுத்தும் கூட்டம் 

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குற்பட்ட காவத்தமுனையில் 04.09.2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 106 விஷேட தேவையுடையோருக்க இயங்கி வருகின்ற HUMAN AID (ODDAMAVADI SPECIAL NEED’S) SOCIAL SERVICES ORGANAIZATION. விஷேட தேவையுடையோர் பாடசாலையினை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா புதிய நிருவாகத்தின் கீழ் பொறுப்பெடுத்துள்ளமையாது பிரதேச மக்களின் வரவேற்பிற்கும் பாராட்டுக்கும் உரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் பயிலும் மாணவர்கள் அதிகம் பிறப்பால் மாற்றுத்திறன் (அங்கவீனம்) அல்லது மூளையின் நுண்ணறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களாகவும் உடம் ரீதியான பார்வைக்குறைபாடு, கேட்டல் குறைபாடு, பேச்சுக் குறைபாடு, அவயங்கள் குறைபாடு மற்றும் உள ரீதியாக சிந்திப்பதில் சிரமம், புரிந்து கொள்வதில் சிரமம், மனவளர்ச்சி குன்றிய நிலை, நடத்தைகளில் மாற்றம், மெல்லக் கற்றல், நீண்ட கால மருத்துவ கண்கானிப்புக்கள் தேவைகள் போன்ற குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர்.அதிலும் முக்கியமாக பின்வரும் குறைபாடுகளை கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.

  • ADHD அதித செயற்பாடுகளை கொண்டவர்கள்.
  • CEREBRAL PALSY மூளைக்காய்ச்சலினால் பாதிக்கபட்டவர்கள்.
  • AUTISM (ஓட்டீசம்).
  • MENTALLY DEVELOPMENT DELAY ( மூளைசார் விருத்தி குறைவு).
  • DOWN SYNDROME (மன்கொள்ளிய பாதிப்பு).
  • EPILEPSY (வலிப்பு நோயை கொண்டவர்கள்).
  • DEAF (காது கேளாமை) போன்றவற்றினை குறிப்பிடலாம்.

அந்த வகையிலே பல தேவைகளை கொண்டதாக இயங்கி வருகின்ற குறித்த பாடசாலையினை கல்குடா ஜம்இய்யியது தஃவதில் இஸ்லாமியா பொறுப்பெடுத்து சட்டத்தரணி ஹபீப் றிபான் தலைவராகவும், மெளலவி SHM.அறபாத் (ஸஹ்வி) செயலாளராகவும் கடமையாற்றுகின்ற 2017ம் ஆண்டுக்கான புதிய நிருவாகத்தினையும் தெரிவு செய்துள்ளது. அத்தோடு பொருளாளராக எம்.பி.எம் ஜஃபர், உப தலைவராக மெளலவி எம்.பீ.எம்.இஸ்மாயில் (மதனி), உறுப்பினர்களாக ஏ.கே.எம்.சர்ஜூன் (DDO), மெளலவி ஏ.எல்.முஸ்தபா, மெளலவி ஏ.எல்.பதுர்டீன், மெளலவி.ஏ.ஹபீப், ஏ.எம்.எம்.உவைஸ் ஆசிரியர், ஏ.எல்.எம்.நசீர் (PHI), ஏ.பி.எம்.சித்தீக் ஆசிரியர் ஆகியோர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளர்.

இந்த விடயம் சம்பந்தமாக பிரதேச மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இன்று25.03.2017 சனிக்கிழமை ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் புதிய பாடசாலையினை பொறுப்பெடுத்துள்ள புதிய நிருவாகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் பிரதேசத்தின் புத்திஜீவிகள், மார்க்க அறிஞர்கள், வர்த்தகர்கள், தனவந்தர்கள் என பலரும் சமூகமளித்திருந்தனர்.

அத்தோடு குறித்த பாடசாலைக்கு உடனடி தேவையாக இருக்கின்ற மாணவர்களுக்கான உபகர்ணங்கள், ஆசிரியர்களுக்கான சம்பள கொடுப்பனவுகள், பஸ்ஸுக்கான எரிபொருளும் பராமரிப்பும், மாணவர்களுக்கான நாளாந்த போசாக்குணவு, பாடசாலை காவலாளிகளுக்கான கொடுப்பனவும் பராமரிப்பும் போன்றவைகளுக்காக புதிய நிருவாகமானது வலது குறைந்தொர் அல்லது விஷேட தேவையுடையோர் சமூகத்தால் அரவணைத்து அன்பு காட்டப்பட வேண்டியவர்கள் என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்தியது.

அவர்களுக்கு உதவுவது எமது மறுமையின் நிலையான நற்பேற்றிக்கு உதவி செய்யும் என்பதனை கவனத்திற் கொண்டு ஜம்மியாவின் பணியின் ஓர் அங்கமாக குறித்த பாடசாலையினை கட்டியெழுப்ப கல்விமான்கள், தனவந்தர்கள், மற்றும் துறைசார் அறிஞர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தது.

அதே போன்று கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்கனவே தந்தையை இழந்த மாணவ்ர்களுக்கான கல்விகூடம், (நாவலடி மர்கஸ் அந் நூர், தியாவட்டவான் தாருஸ் ஸலாம்), பெண்களுக்கான அரபுக் கல்லூரி( மீராவோடை உம்மு சுலைம்) ஆகிய கல்வி நிறுவனங்களுடன் நான்காவதாக விஷேட தேவையுடையோருக்க குறித்த பாடசாலையினையும் இணைத்துள்ளமையானது உண்மையில் சமூகத்தால் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். 

ஆகவே மேற்படி கல்வி நிறுவனங்களுக்கு உதவி கரம் நீட்டி அரவணைப்பது போல் காவத்தமுனையில் அமைந்துள்ள குறித்த விஷேட தேவைகள் உடையோருக்கன பாடசலைக்கும் தேவையான உதவியினையும் ஆதரவினையும், ஒத்துளைப்புக்களையும் தரவேண்டும் என குறித்த பாடசலையின் புதிய நிருவாகம அன்புடன்  வேண்டி நிற்கின்றது. அதன் வங்கி கணக்கிலக்கம் 0010230511001 அமானா வங்கி ஓட்டமாவடி கிளை.

ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் புதிய நிருவாகத்தின் தலைவரான சட்டத்தரணி றிபான் ஹபீப் தலைமையில் இடம் பெற்ற தெளிவு படுத்தும் கூட்டத்தின் இடம் பெற்ற சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.