உயர் பீடக் கூட்டத்திலிருந்து வெளியேறினார் ஹசன் அலி !

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய அதியுயர் பீடக் கூட்டம் இன்றிரவு கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் நாளைய பேராளர் மாநாட்டில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் மற்றும் பதவி நிலைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன் போது கட்சியின் ஆரம்ப போராளி எம்.ரி ஹசன் அலி அவர்களை தவிசாளர் பதவியை ஏற்குமாறு ரவூப் ஹக்கீம் அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் இவ் வேண்டுகோளை நிராகரித்தவராக அதியுயர் பீடக் கூட்டத்திலிருந்து வெளியேறினார் ஹசன் அலி அவர்கள் .

இந்நிலையை தொடர்ந்து ஹசன் அலி அவர்களுக்கு ஆதரவான உயர்பீட உறுப்பினர்களும் வெளியேறிச் சென்றதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் ஒருவர் லங்கா புரண்ட் இணையத்தளத்துக்கு தெரிவித்தார் .

இவரை சமரசம் செய்யும் நோக்கில் மற்றும் பல அதி யுயர் பீட உறுப்பினர்கள் ஹசன் அலி அவர்களின் வீட்டில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்தாலோசிப்பதாகவும் எமக்கு அறியக் கிடைக்கின்றது .

ஏற்கனவே ரவூப் ஹக்கீம் அவர்கள் ஹசன் அலி அவர்களுக்கு அதிகாரமிக்க செயலாளர் பதவியை தருவதாக தேர்தல் ஆணையாளர் முன்னிலையில் வாக்குறுதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.