ஹக்கீம் அவர்கள் இன்னொரு பெண்ணோடு இருப்பதை குமாரி கண்டுகொண்டார் , குமாரி கூரே : ஒரு தலைவனின் கிளியோபேட்ரா

(இந்தக் கட்டுரையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் எந்த அரசியல் வாதியும் இதில் சொல்லப்பட்டிருப்பவை பொய் என்றால் எனக்கெதிராக மான நஷ்ட வழக்குத் தொடரலாம்)

(நிஜத்தின் நிழல்கள் பகுதி – 3)

குமாரி கூரே,
ட்ரோஜான் யுத்தத்தில் வரும் பாரிஸின் ஹெலேனா அவள்.

ஆதர் பேரரசனின் கதையில் வரும் ஸேர் லான்ஸ்லொட்டின் இளவரசி கினிவேர் அவள்.

டாந்தேயின் ‘’டிவைன் கொமெடியில்’’ வரும் பவ்லோவின் பிரான்செஸ்கா அவள்.

சார்லெட் புரோண்டே எழுதிய ‘ஜேன் அயர்ல்’ வரும் ரோசெஸ்டர் பிரபுவின் ஜேன் அயர் அவள்.

ஜேன் ஒஸ்டினின் ‘பிரைட் அண்ட் பிரஜுடைஸ்’ கதையில் வரும் டார்சியின் எலிஸபத் அவள்.

கிங் ஆதரின் காலத்தில் வாழ்ந்த ட்ரிஸ்டானின் இசோல்டே அவள்.

டி.எச் லோரன்சின் ‘லேடி செடர்லீஸ் லவர்’ நாவலில் வரும் ஒலிவர் மெலேர்சின் லேடி செடர்லீ அவள்.

இவர்கள் எல்லோருக்ககுமிடையில் ஒரு ஒருமைப்பாடிருக்கிறது.இவர்கள் எல்லோரும் கள்ளக் காதலர்கள்.வேறொருவரோடு திருமணமானவர்கள்.எமது கதையும் இதுதானே.மேற்குலகு இவர்களை காதலர்கள் என்று போற்றுகிறது.இஸ்லாம் இப்படிப்பட்டவர்களை விபச்சாரகர்கள் என்று காறித்துப்புகிறது.சிந்தனைகளின் வேறுபாட்டைப் பார்த்தீர்களா?

சரி எமது கதைக்கு வருவோம்.

முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் ஜே கூரேயின் மூத்த மகள்தான் குமாரி கூரே.அவரைத் தொடர்ந்து நான்கு சகோதரர்கள் இருக்கின்றனர்.குடும்பத்திற்கு ஒரே ஒரு பெண் பிள்ளை.நாட்டியத்தில் குறிப்பாக கதகளியில் கைதேர்ந்த பெண்.வயலினை சிறப்பாக வாசிக்கக் கூடியவர். பாணந்துறையில் உள்ள புனித அந்தோனியார் மகளிர் கல்லூரியில் பயின்றவர்.திருமணம் முடித்து விவாகரத்தானவர்.இரண்டு குழந்தைகளின் தாய்.ஒன்று ஆண்,ஒன்று பெண்.ஆரம்பத்தில் குழந்தைகள் இருவரும் தந்தையோடு இருந்தார்கள்.பின்னர் குமாரியின் பெற்றோரே அவர்களை வளர்த்துவந்தனர்.
விவாகரத்தானதன் பின்னர் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக குமாரி கொழும்பிலே உடைகள் வாங்கி விற்கும் சிறு வியாபாரத்தின் மூலம் வரும் வருமானத்தில் ஈடுபட்டிருந்தார்.அவர் மரணிக்கும் போது அவருக்கு வயது நாற்பது.

குமாரின் கூரேயை ஹக்கீம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர்.

அன்றிலிருந்து அவர்களுக்கிடையே நெருக்கமான உறவுகள் இருந்து வந்தது.இவற்றை எழுதுவதற்காக என்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமிடத்து என்னால் தைரியமாக வழக்காடுமன்றத்தில் நிரூபிக்க முடிந்த விடயங்கள் மாத்திரமே இங்கு எழுதப்படுகின்றது.இதை விட பல’மோசமான,இப்படியுமா எமது தலைவர் என்று திடுக்கிடக்கூடிய தகவல்கள் என்னிடமிருந்தும் அதற்கான ஆவண ஆதாரங்களுக்காக நான்                               காத்துக்கொண்டிருக்கிறேன்.அவை கிடைக்குமிடத்து அவற்றை என்னால் எழுத முடியும்.அதுவரைக்கும் என்னால் ஆதாரங்கள் கொடுக்க முடிந்த விடயங்களை மாத்திரம் பதிவிடுகிறேன்.

ஹக்கீம் குமாரியைத் திருமணம் செய்வதாக வாக்களித்திருந்தார்.அவரின் இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வருமாறும் அவர்களை தான் கவனிப்பதாகவும் அவர் வாக்களித்திருந்தார்.கண்டி மற்றும் பல பிரதேசங்களுக்கு குமாரியை அவர் கூட்டிச்சென்றார்.ஜா எலெயில் இருக்கும் ஒரு வீட்டில் அவர்கள் சந்தித்துக்கொள்வார்கள்.தன்னைப் பார்த்ததன் பின்னர் வேறு எந்தப் பெண்களோடும் தான் உறவாடுவதில்லை என்று குமாரி குரேக்கு அவர் வாக்களித்திருந்தார்.தன்னைத் தவிர்த்து வேறு பலருடனும் ஹக்கீமுக்குத் தொடர்பிருக்கிறது என்று குமாரி சந்தேகித்தார்.அவர்கள் வழமையாகச் சந்திக்கும் கொழும்பு பிளவர் வீதியில் இருக்கும் வீட்டிற்கு சென்ற போது ஹக்கீம் அவர்கள் இன்னொரு பெண்ணோடு இருப்பதை குமாரி கண்டுகொண்டார்.ரவூப் ஹக்கீம் மது அருந்துவதால் தானும் அவரோடு சேர்ந்து மது அருந்தும் நிலையும் குமாரிக்கு ஏற்பட்டது.தான் அழைக்கும்போது அவள் வருவதில்லை என்று ஹக்கீம் விசனப்பட்டதால் கல்கிஸையில் குமாரி ஒரு வீடு எடுக்க நேர்ந்தது.அங்கு ஒரு வாரத்திற்கு ஒன்று அல்லது இரு முறை ஹக்கீம் குமாரியை சந்தித்து வந்தார்.இந்தத் தகவல்களை 2004 மே மாதம் 16ம் திகதி ரூபவாஹினித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செவ்வியில் அவர் விபரித்திருந்தார். அவற்றின் உண்மைத்தன்மைகள் இத்தொடரின் இறுதியில் ஆராயப்படும்.

தேனை உறுஞ்சிவிட்டு வண்டு பூவைக்கைவிட்டது.கறியைச் சுவையாக்கிவிட்டு கறிவேப்பிலை வெளியே வீசப்பட்டது.இறைச்சியைச் சுவைத்துவிட்டு சிங்கம் எலும்பை எறிந்தது.இசையைக் கேட்டுவிட்டு புல்லாங்குழல் காற்றில் வீசப்பட்டது.ஹக்கீம் குமாரியை ஒதுக்க ஆரம்பித்தார்.

குமாரியின் தொலைபேசியழைப்புகளை ஹக்கீம் நிராகரித்தார்.சில சமயங்களில் தான் கொழும்பில் இல்லை என்று தட்டிக்கழித்து வந்தார்.அப்படியான சந்தர்ப்பத்தில்தான் ஹக்கீமின் பிறந்தநாள் வந்தது.அவருடைய பிறந்த நாளில் அவரைச் சந்திப்பதற்காக குமாரி ஹக்கீமைத் தொடர்பு கொண்ட போது தான் கொழும்பில் இல்லை என்று அவர் தட்டிக் கழித்துவிட்டார்.

ஹக்கீம் ஒரு ரகர் பிரியர்.ரகர் என்றால் அவருக்கு உயிர்.அன்று கொழும்பில் ரகர் மெட்ச் நடந்தது.அந்த மெச்சை அவர் நேரடியாகக் காண்பதற்காகச் சென்றிருந்தார். நேரடி ஒளிபரப்பின்போது அவரின் முகமும் தொலைக்காட்சியில் வந்துவிட்டது.தற்செயலாக இதனைப் பார்த்துக்கொண்டிருந்த குமாரி குரே தான் கொழும்பில் இல்லை என்று ஹக்கீம் கூறியது பொய் என உணர்ந்துகொண்டார்.

அவரின் பிறந்தநாளன்று அவரின் வீட்டுக்கே செல்வது என்று முடிவு செய்து ஏப்ரல் 13ம் திகதி,நமது கதை நடைபெறும் தினத்தில் அவரின் வீட்டிற்கே வந்துவிட்டார்.கதவருகில் நின்ற காவலாளியிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.பின்னர் காவலாளி ஹக்கீமிடம் ஓடிவந்து இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்று கூறியபோதும் கூட அனுமதி மறுக்கப்பட்டது.அதனை அறிந்தவுடன் குமாரி கதவருகே நின்று கொண்டு சத்தம் போட ஆரம்பித்தார்.அந்த சந்தர்ப்பத்தில்தான் காங்கிறசின் நான்கு உறுப்புனர்களும் ஹக்கீமோடு பேசிவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர்.கதவருகே சத்தம் போட்டுக்கொண்டிருக்கும் குமாரியை அவர்கள் அவதானித்தனர்.

ரிஷாத் பதியுதீன் குமரியை அணுகி விபரம் என்ன என்று வினவ குமாரி ரிஷாடிடம் விபரித்தார்.

விபரத்தைக் கேட்டறிந்துகொண்ட ரிஷாடின் மூளையில் உடனே திட்டம் ஒன்று உதித்தது.
-தொடரும்….

RAAZI MUHAMMADH JAABIR