அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமுகாம்

எம்.எம்.ஜபீர்
 
 விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு  தேசிய வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று  பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவமுகாம் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறோஸா நக்பர், அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.பைசாத், அக்கரைப்பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகதர் எம்.பீ.எம்.றஜாய், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.