SLMC யின் மறைக்கப்பட்ட அக்கரைப்பற்று இடைக்கால வரலாறு

 அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரசின் மீள்வரலாறு பற்றி சில சகோதரர்கள் முகப்புத்தகத்தில் பல தகவல்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் அரசியலில் புறக்கணிக்க முடியாத சக்தி என்பதை இச்சகோதரர்கள் ஏற்றுக்கொண்டதற்கு முதற்கண் நன்றி.

 
 விஷமும்,களைகளும் நிறைந்த பூமியில் மு.கா.வை நட்டு சத்தியப் பாதையில் வளர்த்து அதை பயன்தரும் விருட்சமாக்கிய போராட்டம் பற்றியும்,அதன் சோதனைகள் பற்றியும் யார் அறிந்திருக்காட்டாவிட்டாலும் நிச்சயம் இந்த மரம் மண்டியிட்டு மண்ணோடு  மண்ணாகிவிட வேண்டும் என்று இரவு பகலாக முயற்சித்தவர்கள் நன்கு அறிந்திருப்பர்.

 
பெருந்தலைவன் அஷ்ரப்பின் மறைவுக்குப்பின் மெல்ல நெருங்கி அந்த மரத்திலேயே ஏறிக்கொண்டு வரலாற்றை திரிவுபடுத்தி இன்று அந்த சாதனைகளுக்கு உரிமை கோரும் அயோக்கியத்தனத்தின் உச்சத்தை இத்தகைய பதிவிறக்கங்களில் தெளிவாகவே காணமுடிகிறது.

 
வாழ்த்துக்கள்,வெளியிருந்து கொல்லத்துடித்தவர்களுக்கு உள்ளிருந்து கொல்ல இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் கதவுகளை திறந்து விட்டிருக்கிறது. முயற்சித்துப்பாருங்காள் முடிந்தால் கொன்று  விடுங்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் என்பது சமூக விடுதலைக்கான சக்தி தனிநபர்களின் அலங்காரப் பொருள்அல்ல!
முஸ்லிம் சமூகத்தின் சுய நிர்ணயத்தையும், இத்தேசத்தின் சாந்தியையும் வெற்றி கொள்ளப் புறப்பட்ட உணர்வுகளின் சங்கமம்தான் முஸ்லிம் காங்கிரஸ்.

 

 

 

நீங்கள் தலைகீழாய் நின்றாலும் நயவஞ்சகர்களால் அதை கையகப்படுத்தவே முடியாது!
அறிவின் ஒளியை இழந்தவர்களால் தீர்க்கதரிசனங்களை புரிந்து கொள்ளமுடியாது. சிலருக்கு அது நிகழ்ந்த பின்பும் அறிவில் ஒளி பிறக்காது.

 
தமது பதிவிறக்கங்களே தம்மை சமூகத்தில் மிக இழிவாகப்புடம் போட்டுக்காட்டுகின்றன என்பதை இத்தகைய சகோதரர்கள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. இனியும் உணரப்போவதாகத் தெரியவுமில்லை.
முஸ்லிம் காங்கிரஸை விட்டு சேகுஇஸ்ஸடீன் விலக்கப்பட்ட பின்பும் அக்கரைப்பற்று மு.கா.வின் பூமியாகவே இருந்தது. ஆனால் அதாஉல்லா வெளியேறிய பின் மு.கா.வினால் நினைத்துப் பார்க்கமுடியாத பூமியாக அக்கரைப்பற்று மாறியது.

 

எப்படி இருந்தும் மு.கா.முஸ்லிம் சமூகத்தின் தவிர்க்கமுடியாத பாதுகாப்பு அரண் என்பதை நிராகரிக்க முடியாத உள்ளங்கள் துணிந்தன அக்கரைப்பற்றில் மு.கா. முன்னணி வெற்றிடங்களில் குதித்தன.அவர்கள் எதிர்கொண்ட சவால்போல் மு.கா.எந்தப் பிரதேசத்திலும் எதிர் கொண்டு இருக்க முடியாது என்பதை தலைவரும், தவிசாளரும், செயளாளர் நாயகமும் என்றும் மறக்கமுடியாது.

 

2008ம்ஆண்டு மாகாணசபை தேர்தல் களத்தின் போது அமைப்பாளராக இயங்கிய ULஉவைஸ்  மீது மு.கா.சந்தேகப் பார்வை விழுந்தது ஆனால் அக்கரைப்பற்றில் கட்சியின் மத்தியகுழுவாக இயங்கியவர்கள் இதயசுத்தியாக கட்சிக்காக செயற்பட்டனர்.அந்த மத்திய குழுவை அறிமுகம் செய்ய வேண்டிய தேவையை இன்று சிலர் ஏற்படுத்தியுள்ளனர்.

 
*சம்சுடீன் ஹாஜியார்(தலைவர்)
*நக்கீல் ஆசிரியர்
*மீரா எஸ் இஸ்ஸதீன்
*இர்பான்
*பஸீர் ஹாஜி
*அல்குறைஸ் ஹனீபா
*அலி(ஸ்டூடியோ)
*Ero lanka உவைஸ்
*மீரா அலி றஜாய்
*நுபைல்
*மர்ஹூம் ஜிப்ரி(Tr)

 
 இம்மத்திய குழு தலைமையை சந்தித்து அமைப்பாளர் உவைஸ் மீது நம்பிக்கை வைத்திருக்காமல் முன்கூட்டியே பதில்ஈடு ஒன்றை செய்யவேண்டியதன் அவசியத்தை எடுத்து கூறி பல சதிகளை முறையடித்து மிகவும் பிரயாயத்துக்கு மத்தியில் யாரும் முன் வர முடியாத கட்டத்தில் சகோதரர்: நஸார் ஹாஜி கட்சியின் மாவட்ட இணைப்பாளராகவும்
சகோதரர்: நபீல் மாவட்ட பொருளாளராகவும்
ஹனீபா மதனீ பிரமுகர் என்று கட்சிக்கு உள்ளீர்ப்பு செய்யப்பட்டனர். இதனை அனைத்து மு.கா. உயர்பீடமும் அறியும்.

 

சகோதரர் : நஸார் ஹஜி தலைமையில் அதாஉல்லாவையும்,சேகை விற்று சேமன் பதவியை வாங்கிய தவத்தையும் எதிர்த்து மஹிந்த அரசில் எதிர்கட்சியாக இருந்த நேரத்தில் அக்கரைப்பற்றில் மு.கா.வையும் அதன் தலைமையையும் நிலைநிறுத்த இவ்வணி புறப்பட்டது.

 

அக்கரைப்பற்றுக்குள் மு.கா. தலைவர் நுளைய முடியாது என பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த தருணத்தில் ஆதார வைத்திய சாலைக்கு முன்னால் அமைந்துள்ள நெளபல் ஆசிரியரின் கட்டிடத்துக்கு மு.கா.தலைவரை அழைத்து வந்து நிகழ்வை முடித்து ஒரு சாதனை வீரனை போல் பாதுகாப்பாக தலைமை உலா சென்று  பின் அனுப்பி வைக்கப்பட்டது.இதுதான் வரலாறு . இவ்வரலாற்று நிகழ்வை  முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும் அதன் போராளிகளும் அதாஉல்லாவின் இரும்புக் கோட்டைக்குள் ஹக்கீம் என பேசி மகிழ்ந்தனர்.
தொடரும்…

M.இர்பான்

அக்கரைப்பற்று.