இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் புதிய விற்பனை மையங்கள் 50 ஐ ஸ்தாபிக்க திட்டம் :மஹிந்த அமரவீர

அடுத்த ஆண்டிற்குள் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் புதிய விற்பனை மையங்கள் 50 ஐ ஸ்தாபிக்க திட்டமிட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் 12 புதிய விற்பனை மையங்களை இந்த வருடத்தில் ஸ்தாபிப்பதாக அவர் கூறுகின்றார். 

இரண்டு விற்பனை மையங்கள் வரகாபொல மற்றும் குளியாப்பிட்டிய நகரங்களில் இன்று திறந்து வைக்கப்பட்டதுடன், அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். 

இதுவரை காலமும் நட்டத்தில் இயங்கிய அரச நிறுவனமான மீன்பிடி கூட்டுத்தாபனத்தின், புதிய நிர்வாக மற்றும் முகாமைத்துவம் காரணமாக தற்போது இலாபமடையும் நிறுவனமாக மாறியுள்ளதென்று அமைச்சர் கூறுகின்றார். 

அடுத்த ஆண்டு இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம் 500 மில்லியன் ரூபா இலாபத்தை எட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.