கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிணைக்கோரி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
2015 ஜனவரி மாதம் முதல் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கருணா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருணாவின் சார்பில் அவரின் வழக்கறிஞர் குறித்த மனுவை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
கருணாவுக்கு சிறைச்சாலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும், கருணா குறித்த வாகனத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும் குறித்த வழக்கறிஞர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
கருணாவை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட கருணாவை, எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.