2017 ஆம் ஆண்டுக்கான ஊவா மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம், பெரும்பான்மை வாக்குகளால் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சாதகமாக வாக்களித்திருந்த நிலையில் ஜே.வி.பி கட்சி உறுப்பினர்கள் இருவர் எதிராக வாக்களித்துள்ளனர்.
28 பெரும்பான்மை வாக்குகளால் ஊவா மாகாண சபைக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20 உறுப்பினர்களுக்கு இத்தாலி செல்வதற்கான விமானச் சீட்டுக்கள் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவினால் இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.