சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட மரங்களை கைப்பற்றிய பொலிஸார்

அஸாஹிம்

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி பகுதியில்  நேற்று  (28.11.2016) அதிகாலை சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட மரங்களை கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

2
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் அக்குரானை காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையத்து அப்பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது நேற்று  அதிகாலை அக்குரானையில் இருந்து ஓட்டமாவடியில் உள்ள மர ஆலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் வாகனேரி பகுதியில் வைத்து குறித்த மரங்களும் மரம் ஏற்றுவதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

5
எட்டு (08) அடி தொடக்கம் பணிரெண்டு (12) அடிவரையான பத்து (10) மதுரை, தேக்கு மரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.