புத்தளத்தின் முன்னாள் நகரபிதா கே ஏ பாயிஸை முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைக்கும் நிகழ்வு நேற்று இரவு 2016.11.11 புத்ததளத்தில் நடைபெற்ற போது அவரை வரவேற்றுப்பேசிய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், நகைச்சுவை நடிகர்களான நாகேஷ் மற்றும் சுருளிராஜன் ஆகியோரின் நடிப்புப் பாணியில் சொதப்பி படத்தியேட்டரில் கலரியில் இருக்கும் விசில் அடிச்சான் குஞ்சுகளின் கைதட்டல்களையும் ஆரவாரச் சிரிப்புக்களையும் பெற்றுக் கொண்டு மகிழ்ந்தார். முஸ்லிம் சமூகத்தின் தலைவன் என தன்னைப் பீற்றிக்கொள்ளும் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்துக்கு எத்னையோ பிரச்சினைகள் இருக்கும் இந்தக்கால கட்டத்தில் அவற்றையெல்லாம் விடுத்து இவ்வளவு மட்டகரமாக உளறுவார் என்று எவருமே எதிர் பார்த்திருக்கவில்லை ஜோக்கர் ஹக்கீம் வார்த்தைக்கு வார்த்தை தனது பேச்சில் றிசாட்டை திட்டித்தீர்த்ததிலிருந்து அவருக்கு றிசாட்டின் எழுச்சியினதும் வளச்சியினதும் மீதான பயம் அடிவயிற்றைக் கலக்கியிருக்கின்றது என்பது மட்டும் தெளிவாயிற்று. ஹக்கீம் தனது அரசியல் வாழ்வில் எந்தக் கூட்டத்திலும் தனக்கெதிராக அரசியல் நடத்தும் எவரையும் இவ்வாறு தூசித்ததும் இல்லை நையாண்டி பண்ணியதுமில்லை உண்மையில் ஹக்கீம் இரவு நேரங்களில் கூட தனது வீட்டில் நிம்மதியாக உறங்குவதில்லை என்பது அவரது பேச்சிலிருந்து வெளிப்படுகின்றது.
சாதாரண வேட்பாளராக மு.கா விற்குள் வந்த றிசாட் இவ்வளவு தூரம் வளர்ந்து ஒரு கட்சித்தலைவனாக ஆகி அரசியலில் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதை ஹக்கீம் ஒப்புக்கொண்டுவிட்டார். ‘இப்போது அவர்கள் கொஞ்சக்காலம் ஆடத்தான் செய்கிறார்கள்’ என்று கூறும் ஹக்கீம் றிசாட்டை அடக்குவதற்கே காடைத்தன வழியை தேர்ந்தெடுத்தேன் என்று தனது பழி தீர்க்கும் எண்ணத்தை கொட்டித்தீர்க்கிறார். அதற்கு தான் தேர்ந்தெடுத்த சரியான ஆசாமி பாயிஸ் என்பதை பகிரங்கமாக அறிவித்து புத்தளத்தில் இன்னுமொரு களேபரம் ஒன்றை உருவாக்குவதற்கு அடித்தள்மிட்டுள்ளார்.
புத்தளத்து உள்ளுர் மக்களுக்கும் இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வட மாகாண மக்களுக்குமிடையே மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு மூல காரணம் ஹக்கீமே என்பதை இந்தக்கணமே இந்த ஆக்கத்தில் பதிகின்றோம்.
றிசாட்டின் அரசியல் பிரவேசம்பற்றி கேவலப்படுத்தும் ஹக்கீம், தான் ஒரு யோக்கியனா? என்பதை ஒரு கணம் நினைத்துப்பார்க்க வேண்டும்.
புகாரிதீன் ஹாஜியாரின் பெயார்லைன் நிறுவனத்தில் சட்ட உதவியாளராக பணியாற்றிவர்தான் இந்த ஹக்கீம். ஏதோ ஓரு வேலைக்காக மர்ஹூம் அஸ்ரபிடம் முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம் பி யான புகாரிதீன் ஹாஜியார் ஹக்கீமை அறிமுகம் செய்து வைத்ததன் விளைவையே இன்று முஸ்லிம் சமூகம் அனுபவிக்கின்றது. அஸ்ரபிடமிருந்து கெஞ்சிப்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்துவத்திலிருந்து படிப்படியாக அந்தக்கட்சிக்குள் புகுந்து தான் ஒரு யோக்கியன் போல காட்டிக்கொண்டார். தேசியப்பட்டியலில் எம் பி பதவியைப் பெறுவதற்காக தனது மாமனார் குத்தூஸ் ஹாஜியாரின் பணத்தில் இருந்து வாங்கிய பஜ்ரோவை இவர் மர்ஹூம் அஸ்ரபின் நெருக்கமான நண்பர் ஒருவருக்கு அஸ்ரபுக்கு தெரியாமலேயே வழங்கி, பின்னர் அந்த நண்பரிடம் கெஞ்சி அவரது கிடைக்கப்பெற்றதே எம் பி பதவி மாமனிதர் அஸ்ரபுக்கே தண்ணீர் காட்டியவர்தான் தற்போதைய தண்ணீர் அமைச்சர்.
அஸ்ரபின் மறைவின் பின்னர் இணைத்லைவர்களாக பேரியல் அஸ்ரபையும் ஹக்கீமையும் மு.கா வின் உயர்பீட்ம் நியமித்த போது, தனித்தலைவர் பதவியையே தனது நப்ஸ் கேட்கின்றது என்று கூறி தன்னை அரசியலில் வளர்த்த மர்ஹூம் அஸ்ரபின் அன்பு மனைவிக்கு துரோகம் செய்து தலைமையைத் தட்டிப்பறித்தவர் அத்துடன் திருமதி பேரியல் அஸ்ரபை நீதி மன்றத்துக்கு அடிக்கடி இழுத்து அவமானப்படுத்திய ஆசாமிதான் தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்.
ஹக்கீம் தனது பேச்சில் மர்ஹூம் நூர்தீன் மசூரை இழிவாகப்பேசி வன்னி மக்களையும் குறிப்பாக எருக்கலம்பிட்டி, நாகவில்லு மக்களையும் கேவலப்படுத்தியதுதான் வேதனையானது.
இவரது நாற்றங்களை கிளறப்போனால் அது கொஞ்ச நஞ்சமல்ல.
இறால் தன் தலையில் மலத்தை வைத்துக்கொண்டு நாறுது நாறுது என்று சொன்னது போலவே ஹக்கீமின் புத்தளத்துக் கதை இருக்கின்றது.
புத்தளம் நெய்னா முகம்மது.