2017ம் ஆண்டுக்காண வரவு செலவு திட்டம் தொடர்பில் நிதி அமைச்சரின்முன்மொழிவுகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாதெரிவித்துள்ளார்.
இன்று இடம் பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டுள்ளார்.
2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 10ம் திகதி நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பரிந்துரைகள் சில வரவு செலவு திட்டத்தில்உள்ளடக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவிதமான நிபந்தனையும் இன்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது ஆதரவை வரவுசெலவு திட்டத்திற்கு வழங்கும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாகூறியுள்ளார்.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.