கணக்கில்வராத எந்த விவகாரமும் எனது கவனத்துக்கு வந்தால், இந்தியா சுதந்திரம்பெற்ற காலத்தில் இருந்து ஆவணங்களை ஆய்வு செய்வேன்!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள நடவடிக்கையை கருப்புப் பண பதுக்கலை தூய்மைப்படுத்தும் ‘தூய்மை இந்தியா’ திட்டம் என ஜப்பான் நாட்டின் கோபே நகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை தொடர்ந்து நாட்டின் நலன்காக்க 4-6 மணிநேரம் வரிசையில் நிற்கும் என் நாட்டு மக்களுக்கு தலைவணங்குகிறேன் என்றும் தெரிவித்தார்.
modi-addresses-nation_650x400_41478624864
இந்த சிரமம் தொடர்பாக நெடுநாளாக யோசித்து, ரகசியமாக பாதுகாத்து, இவ்விவகாரத்தில் என்னை யாரும் வாழ்த்தப் போவதில்லை என்பது தெரிந்தே இந்த அவசர நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது.

இந்த திட்டத்தின் முடிவில் (டிசம்பர் 30-ம் தேதிக்கு பின்னர்) உங்களை தண்டிக்க புதிய நடவடிக்கை எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என மீண்டும் ஒருமுறை தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.

கணக்கில்வராத எந்த விவகாரமும் எனது கவனத்துக்கு வந்தால், இந்தியா சுதந்திரம்பெற்ற காலத்தில் இருந்து ஆவணங்களை ஆய்வு செய்வேன். இந்த பணியில் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் ஈடுபடுத்துவேன். 

இதனால், நேர்மையானவர்களுக்கு எந்த பிரச்சனையும் நேராது. என்னைப்பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள் புத்திசாலிகள். கருப்புப் பணத்தை வங்கியில் போடுவதைவிட கங்கையில் கொட்டுவது நல்லது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.