பதூர் மைதானத்துக்கு நடந்தது என்ன ? (துண்டுப்பிரசுரம்)

Quill and Paper

பதூர் மைதானத்திற்கு
நடந்தது என்ன?

பதூர் நகர் வாழ் பெரியோர்களே தாய்மார்களே, இளைஞ்சர்களே, சகோதர, சகோதரிகளே

அஸ்ஸலாமு அலைக்கும்.

மேற்படி விடயம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையை ஆராய்வதற்கு எம்மில் சிலர் முற்பட்டோம் பலரைசந்தித்து இது தொடர்பாக வினவிவோம். இதனடிப்படையில் சில உண்மைகளை உங்களுக்கு தருகின்றோம்
இற்றைக்கு மூன்று தசாப்தகாலங்களுக்கு முன்பு நமது அக்கரைப்பற்று பொத்துவில் வீதியின் நுழைவாயில் அமைந்துள்ள பதூர் நகர்பற்றிய வரலாற்று உண்மையை எம்மில் சிலரைத் தவிர பலருக்கு புரியாத புதிராக இருக்கலாம். இந்நிலப்பரப்பில் எமது முஸ்லீம் மக்கள் மீது கரிசனை கொண்டு அக்கரைப்பற்று வர்த்தக பிரமுகர்கள் 12 பேர் கொள்வனவு செய்து பள்ளிவாசல் ஒன்று அமைப்பதற்கு 04 வளவும் அவ்விடத்தில் முஸ்லீம் பாடசாலை நடாத்துவதற்கு 04 வளவும் மொத்தம் 08 வளவினை பட்டின ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு ‘வக்பு’ செய்து இருந்தனர்.
இவ்வக்பு சம்பந்தமான இவ்விடயத்தை இப்போது அனைத்து பொதுமக்களும் அறிந்து வைத்துள்ளனர்.

எமது கிராமத்தின் பெயர் -பதூர்
எமது பள்ளியின் பெயர் -பதூர்
எமது மையவாடியின் பெயர் -பதூர்
எமது பாடசாலையின் பெயர் -பதூர்
எமது சமூகநலன் நிலையத்தின் பெயர் -பதூர்
எமது வீதியின் பெயர் -பதூர்

 ஏனைய அமைப்புக்களின் பெயர்களும் பதூர் என்னும் புனிதப் பெயரிலே அடையாளப்படுத்துவதை அறிவோம்.
சுனாமிக்குப் பின்னரான நடவடிக்கையின் போது பதூர் பாடசாலை வேறு இடத்தில் மாற்றியமைத்தனால் இவ் பாடசாலையின் பழைய இடத்தில் பட்டின ஜூம்ஆ பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் பதூர் மைதானமாக எமது இளைஞ்சர்கள் இதனைப் பயன்படுத்தினர். பின் பல அபிவிருத்தி வேலைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை காரணம் பதூர் என்னும் புனித பெயரால் அது இயங்கியமையாகும்.

தனது சொந்தப் பெயரை நிலைநிறுத்துவதற்கு பார்த்திருப்பு மண்டபம் என்ற பெயரில் 7லட்சம் ஒதுக்கியதாக கூறி ஒரு லட்சத்துக்கு மேலான தொகையை இப்பெயர் பலகைக்கு செலவு செய்வதற்கும் மீதி 5 1/2 லட்சத்தில் மட்டும் பார்த்திருப்பு மண்டபம் என்று ஒன்று உருவாக்கப்படவுள்ளதாம்? (வேடிக்கை என்னவென்றால் முதல்வர் தவம் என்ற பெயராம்) இக்காலத்தில் 5 1/2 லட்சத்தில் பார்த்திருப்பு மண்டபம் என்பது மலசலகூடமா?

 

 திட்டமிடாத முறையில் பார்த்திருப்பு மண்டப அமைப்புக்கு முரணான முறையில் மைதானத்தின் ஒரு மூலையில் கல்வைக்கப்பட்டுள்ளதாம். இது ஒரு புறம் இருக்க வக்பு செய்யப்பட்ட பள்ளிக்காணிக்குள் பதூர் எனும் புனிதப் பெயர் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த சுயநலவாதியின் பெயரை வைப்பதன் மூலம் வருங்கால சந்ததியினர் இது ஒரு மாற்று சமூகத்தின் ஆளுகைக்குள் இருந்த இடமாக கருதப்படும் என இவற்றை எல்லாம் உணர்ந்த பதூர் நகரின் மூத்த புத்திஜீவிகள் இந்தக் கறுமத்தை நிறுத்துவதற்காக உடனடியாக காணி வக்பு செய்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து இக்கறுமத்தை நிறுத்துமாறு கூறினார்களாம் இவ்விடயத்தை தெரிந்து கொண்ட வக்பு செய்த காணியின் குடும்பத்தினர் ஒன்றில் பதூர் மைதானம் என்று இருந்திருக்கலாம் அல்லது வேறு ஏற்பாடு பற்றி யோசித்திருக்கலாம் என்று கூறி அவர்கள் அல்லாஹ்வே இப்போதுதான் புரிகின்றது பட்டினப் ஜூம்ஆப் பள்ளி வாயலுக்கு பொருளாளராக வருவதற்கு ஏன் வருந்திக்கட்டிக் கொண்டார் என்று தலையில் அடித்துக் கொண்டு முதலில் இவரிடம் இருந்து உறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளார்களாம்.

இவ்விடயத்தில் தற்பெருமை பிடித்த தவம் இவ்மக்களுக்கு பிழையான தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் இது தொடர்பாக எம்மைப் பொறுத்தவரையில் இந்த சுயநலவாதியும், அவரின் பெயரும் இவ்விடத்தை விட்டு தொலைந்து போனால் வக்பு செய்தவரின் குடும்பத்துக்கோ பட்டினப்பள்ளி நிர்வாகத்துக்கோ வழமைபோல் இவ்மக்களுக்கு கொடுப்பதில் எவ்விதப் பிரச்சினையும் இருக்காது என நம்புகிறோம். எனவே பதூர் வாசிகளாகிய நாம் இது தொடர்பாக கவலைப்படத்தேவையில்லை. சம்பந்தப்பட்ட சுயநலவாதி எம்மக்களை வைத்து போட்ட வேசம் புரிந்து கொள்ள முடிகின்றது.
மைதானம் எமது இளைஞர்களுக்கும், எமது பிள்ளைகளுக்கும் கிடைக்கும் நமது மக்களின் கனவுகளுக்கேற்ப இன்ஷா அல்லாஹ் இங்கு அபிவிருத்திகள் நடைபெறும் ஏன் என்றால் பதூர் என்பது புனிதப் பெயர்
‘புனிதப் பெயரான பதூரை நிலைநாட்டுவோம்.’

-பதூர் பற்றாளர்கள்-

 

new-doc-19_fotor