க.கிஷாந்தன்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூட்டு உடன்படிக்கையூடான சம்பள உயர்வை எதிர் காலத்தில் தடுக்க கையெழுத்து வேட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கைச்சாத்திடப்பட்ட புதிய சம்பள உயர்வு தொடர்பில் கம்பனிகளின் போக்குகளுக்கு எதிராக வழக்கு தொடரவும்
தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானங்களை ஜனநாயக நீதிக்கான மலையக அமைப்பு ஊடாக ஹட்டனில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது.
இக் கலந்துரையாடல் அமைப்பின் செயலாளர் செபஸ்டியன் மோகன் ராஜ் தலைமையில் ஹட்டன் கிறிஸ்துவ தொழிலாளர் முன்னணியின் மண்டபத்தில் 05.11.2016 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
இதில் சுமார் பத்துக்குட்பட்ட பொது அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் தொழிற்சங்க வாதிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உட்பட மலையக மக்கள் முன்னனியின் செயலாளர் நாயகம் அ.லோரண்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இதன் போது அங்கு கலந்து கொண்டவர்கள் மேலும் கருத்துக்கள் தெரிவித்ததாவது.
பெருந்தோட்ட தொழிலாளர் சமூகம் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திற்க்காக உழைத்து வருகின்றவர்கள்.
இவர்கள் தினக்கூலிகள் என்ற அடிப்படையிலும் உடன்படிக்கை ஊடக ஊதியம் பெறுபவர்களாகவும் இருந்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் இவர்களின் சம்பள உயர்வு விடயத்தை நோக்கும் போது இவர்களுக்காக சம்பள உயர்வு விடயத்தை முன்னெடுக்கும் தொழிற்சங்க சங்கங்கள் ஊடாகவும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஊடாகவும் இறுதிகட்ட தீர்மானத்தில் ஏமாற்றம் அடையகூடியவர்களாக ஆகிவிடுகின்றனர்.
இதற்காக போராட்டத்தில் குதிக்கும் இவர்களை வைத்து கொண்டு சிலர் அரசியல் இலாபத்தினையும் அடைந்து வருகின்றனர்.
குறித்த ஒரு காலப்பகுதியில் தேயிலைக்கான அதிக இலாபத்தினை உலக சந்தையில் பெற்று கொள்ளும் பெருந்தோட்ட கம்பெனிகள் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை காலப்பகுதியில் நட்டம் ஏற்படுவதாக தாரக மந்திரத்தினை ஓதி விடுகின்றனர்.
இதனால் தமக்கான உழைப்புக்கேற்ற ஊதியத்தில் பாரிய பின்னடைவை அடைந்து வருகின்ற தொழிலாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கை வருமானத்தை முன்னெடுத்து செல்ல முடியாது தின்டாடும் நிலை இவர்களுக்கு வந்துள்ளது.
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் காலத்தில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் காலத்தின் பகுதியை கணக்கிட்டு அக்காலப் பகுதிற்கு நிலுவை சம்பள தொகையும் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இம்முறையானது நடைப்பெற்று முடிந்த சம்பள ஒப்பந்தத்தில் முற்றாக மாற்றம் பெற்று நிலுவை சம்பளத்தினையும் ஏப்பமிடும் நிலை உருவாகியது.
அத்தோடு உயர்த்தப்பட்ட சம்பளமானது ஏற்கனவே வழங்கப்பட்ட 450/=ரூபாய்யிலிருந்து 50/=ரூபாய் அதிகரிக்கப்பட்டு 500/=ரூபாய் வழங்க கையொப்பம் இடப்பட்டுள்ளது.
ஏனைய கொடுப்பனவுகள் என்ற ரீதியில் தொழிலாளர்களுக்கு உள்ளடங்கியுள்ள தொகையானது முழுமையாக அனுபவிக்கும் வாய்புகளுக்கும் ஏகப்பட்ட தொழில் முறைகள் உள்ளடக்கப்பட்டு உயர்த்த பட்டுள்ள தொகையை கிடைக்க விடாமல் செய்யும் ஒப்பந்தமாகவே அமைந்துள்ளது.
இந்த நிலையில் பெருந்தோட்டப்பகுதியை சார்ந்த மொத்த தொழிலாளர்களுக்கும் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இவ்வாறான பங்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெக்க தெளிவாகுகின்றது.
எனவே இந்த கூட்டுபந்தமானது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் வாழ்க்கைக்கும் ஏற்ற ஒன்றள்ள எனவே எதிர் வரும் காலத்தில் தொழிலாளர்களின் வருமானம் மற்றும் தொழில் உரிமை விடயத்தில் இவர்களை காப்பாற்றிய வேலைத்திட்டமாக அமையும் வகையில் கையெழுத்து வேட்டை மூலம் இதற்கான முதற்கட்ட பணி எதிர்வரும் 20.11.2016 அன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கென அனைத்து பொது அமைப்புகளும் உள்ளடக்கப்படுவதுடன் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனையும் பெற்று கொள்ளப்படும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.