அரசியலுக்கு அப்பால் சென்று சர்வதேசத்தில் வடபுல முஸ்லிம்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் றிசாத் பதியுதீன் ஒரு பார்வை!

 

rishad                                            

அபூ அஸ்ஜத் 

இலங்கையின் வடமாகாண முஸ்லிம்களின்  வாழ்வியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சரித்திர நாளாக 1990 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தினை நாம் மறக்க முடியாது.இந்த நாட்டில ஆயுதக் கலாச்சாரத்திற்குரியவர்களாக  பார்க்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின்  கோரத்தாண்டவத்தின் வெளிப்பாடு வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் துடைத்றியப்பட்ட சம்பவமாகும்.

வடக்கு என்பது ஒரு சமூகத்திற்கு மட்டும உரித்தானது என்று தம்பட்டம் அடிக்கும் தமிழ் அரசயல் தலைமைகள்,இன்றும் அந்த மண் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்கின்ற நிலைப்பாட்டில் கருத்துரைத்து வருகின்ற நிலையிமையில் பாரம்பரியமாக அந்த மண்ணை சேர்ந்த முஸ்லிம்களை தொடர்ந்தேச்சையாக அந்நியப்படுத்தும் பணியினை செய்து வருகின்றதை தினமும் இடம் பெறும் சம்பவங்கள் சான்றாகவே உள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் தான் வடக்கு முஸ்லிம்கள் தமது மீள்குடியேற்றத்தை வேண்டி நிற்கின்றனர்.இந்த மீள்குடியேற்றம் என்பது ஏனைய மீள்குடியேற்ற செயற்பாபடுகளுக்கு அப்பாற்பட்டதொன்றாக அமைய வேண்டும் என்பதில் அம்மக்கள் உறுதியாக இருந்துவருகின்றனர்.வெறுமனே 10 தகடுகளையும்,25 ஆயிரம் ரூபா பணத்தையும் வழங்கினால மற்றும் போதும்  என்ற மனநிலையில் இருந்து அரசாங்கமும்,அரச சார்பற்ற நிறுவனங்களும் விடுபட வேண்டும் என்பதில் அர்த்தம் உள்ளதொரு மீள்குடியேற்றத்திற்கு வடக்கில் உள்ள அரச அதிகாரிகள் துணை புரிய வேண்டும் என்றும் துணிந்து அம்மக்கள் கூறிவருகின்றனர்.

1990 ஆம் ஆண்டு புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதுடன் மட்டுமல்லாமல் அம்மக்களின் கோடிக்காண சொத்துக்கள் அவர்களால் அபகரிப்பு செய்யப்பட்டது.இந்த சொத்துக்களின் இன்றைய பெறுமதி இதுவரையும் மதிப்பிடப்படாத நிலையில் அந்த சொத்துக்களுக்கான நஷ்டயீட்டை பெற்றுக் கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு சில  அரசியல்வாதிகள் தடைகளை ஏற்படுத்துவதில் இருந்து சில உண்மைகளை எம்மால் புரிந்து கொள்ளமுடியும்.

இவ்வாறதொரு சூழ் நிலையில் இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளுமு் பொறுப்பினை வன்னி மாவட்ட மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்ஷக வந்த தற்போதைய அமைச்சர் றிசாத் பதியுதீன் அன்று தமது முதல் பாராளுமுன்ற பிரவேசம் முதல் முயற்சித்துவருகின்றார்.இந்த செயற்பாட்டின் எதிரொலியாக அவர் தொடர்பில் அபாண்டங்களும்,பொறுத்தமற்ற சோடிக்கப்பட்ட கருத்துக்களும் சில இனவாத சிந்தணைகளை கொண்ட அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போதும்,அதனையும் தாண்டி தமது போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றார்.

வெறுமனே தனிமனித அரசியல் ஊடகா எதனையும் சாதித்துவிட முடியாது என்பதை யதார்த்த பூரல்வமாக அறிந்து கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் வடபுல பாதிக்கப்பட்ட சமூகங்களான தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களுக்காகவும்,இந்த நாட்டில் நலிவுற்ற நிலையில் வாழும் இந்த சமூகங்களின் விடியலுக்காகவுமே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற அரசியல் கட்சியினை ஆரம்பித்தார்.

இந்த கட்சியின் உதயத்தின் பின்னர் அந்த கட்சியின் தலைமைத்துவத்துக்கு தகுதியுடையவராக சமூகத்தினால் அடையாளம் காணப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது அரசியல் பணிகளை சமூக நோக்காகக் கொண்டு செயற்பட ஆரம்பித்த போது அதனை தாங்கிக் கொள்ளமுடியாத சில சக்திகள் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அத்தனை துவம்சங்களையும் இடைவிடாது செய்தனர்.

இறைவனின் அருளால் தமது துாய்மைிமிக்க செயற்பாட்டினால் இந்த சமூகத்தின் அனைத்து விடயங்களிலும் தம்மை தியாகம் செய்து பணியினை செய்துவருகின்றதை நாம் நினைவுபடுத்துவது அவரது பணிக்கு  இன்னும் உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

வெறுமனே நான்கு சுவர்களுக்குள் மட்டும் பேசகின்ற ஒரு தலைமையாக இல்லாமல் சர்வதேசம் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு தமது ஆற்றலினால் அவர் பல பணிகளை செய்துவருகின்றார்.இந்த நாட்டில் முஸ்லிம்கள் ஒரு சமூகம் என்பதை அடையாளப்படுத்த அவர எடுத்த அதீதி முயற்சிகளை இலங்கை வாழ் முஸ்லிம்கள் மறக்க முடியாது.இது ஒரு வரலாற்று பதிவாக எதிர்கால சமூகத்தின் உள்ளங்களில் பதிவுக்குட்படுத்தப்பட வேண்டியதொன்று என்றால அது மிகையாகாது.

சர்வதேச துாதரங்களின் கவனத்திற்கு வடக்க முஸ்லிம்களின் பரச்சினைகளை  கொண்டு சென்று அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை சகோதர வாஞ்சையுடன் பெற்றுக் கொடுத்த நற்பெயரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்குரியது.அவர் எப்போதும் ஒரு சொல்லும் ஒரு வாசகத்தை இந்த இடத்தில் பதிவு செய்வது பொருத்தமானதாகும்.(பதவிகளையும்,பட்டங்களையும் அல்லாஹ் தரபுவன் அவனது திருப்பொருத்தத்திற்காகவே இவை தம்மிடம் இருக்கும் வரை பணியாற்றுவோம் என்பதாகும்.)

இவ்வாறான நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரது அரசியல் பிரவேசத்தில் இருந்து இன்று வரை வடபுல மக்களுக்காகவும்,வடபுலத்து முஸ்லிம் சமூகததிற்காகவும் ஆற்றியுள்ள பணிகள் வரலாற்று புத்தகமாக எழுதப்பட வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபத சந்திரிக்கா குமாரணதுங்க அவர்களின் தலைமையிலான சுதந்திரக்கட்சியின் மன்னார் மாவட்டத்தின் பிரதி நிதியாக  கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்து அவர் முன்னெடுத்த செயற்பாடுகளை தற்போதைய அரசியல் கற்றுக்குட்டிகளுக்கு தெரியாத உண்மை,அதன் பிற்பாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் வன்னி புனர்வாழ்வு அமைச்சராக,அதன் பிற்பாடு மீள்குடியேற்ற ,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்து தமிழ் மக்களுக்கும் அவர்களது மீள்குடியேற்றத்திற்கும் ஆற்றிய பணிகளை தமிழ் அரசியல் வாதிகள் மறைத்து இனவாதத்துடன் பேசிவருகின்ற போதும்,தமிழ் மக்கள் இன்றும் அதனை நினைவுபடுத்திவருகின்றதை நாம் தெரிவித்தே ஆக வேண்டும்.

இந்த நிலையில் இந்த வடபுல முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை செலுத்தப்பட வேண்டும்,அதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் மூலம் இம்மக்களின் மீள்குடியேற்றம் உரிய முறையில் இடம் பெற வேண்டும் என்று கோறிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்ற போது,வடபுல முஸ்லிம்களின் 26 வது வெளியேற்றத்தின் ஆண்டு நினைவு தினத்தினை இலங்கையில் மட்டுமல்லாது மனித உரிமை தலைமையகம் அமைந்துள்ள ஜெனீவாவிலும் அதனை எடுத்துக் கூறிய தகுதியும்,துணிவும் பெற்று கடந்த 3 ஆம் திகதி  அந்த கடமையினை செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கு வடபுல முஸ்லிம்கள் நன்றி கூறுவது தான் பொருத்தமாகும்.