உலக சுகாதார அமைப்பு சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறம் சர்வதேச புகையிலைக்கு எதிரான மாநாடு இந்தியாவில் வரும் நாளை (திங்கட்கிழமை) முதல் 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகையிலைக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பது இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத்துறை மந்திரி சைரா அப்சல் தாரர் கூறுகையில் “இந்தியாவில் நடைபெறும் புகையிலைக்கு எதிரான மாநாடு முக்கியமானது. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்க சாத்தியமான சூழல் இல்லை. இருநாடுகளுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையே இதற்கு காரணமாக உள்ளது.
தற்போது இருநாடுகளுக்கு இடையே தூதரக அளவில் பழிக்குப்பழி வாங்கும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி இந்தியாவில் உளவு பார்த்ததாக கூறி இந்தியா வழக்கு பதிவு செய்து உள்ளது. எனவே இந்த பதற்றமான நிலையில் மாநாட்டில் பங்கேற்க முடியாது’ என்றார்.