ஒருகாலம் இருந்தது மக்களும் குறிப்பாக இளைஞர்களும் தான் உண்டு தன்வேலை உண்டு என வாழ்ந்தனர் ஆனால் அந்நிலை இப்போது கிடையாது என SM சபீஸ் அண்மையில் T F C மண்டபத்தில் தனது காணியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போது தெரிவித்தார்
அவர் மேலும் பேசுகையில் மக்கள் துன்புறும் வேளைகளிலும்சரி இயற்கை அனர்த்தங்களில் பாதிப்புறும் சந்தர்பங்களிலும்சரி இளைஞர்கள் முனைப்புடன் முன்வந்து உதவி செய்வதனை காணக்கூடியதாக இருக்கின்றது உதராணமாக அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது தனது உயிரையும் துச்சமென மதித்து உதவி செய்த இளைஞர்களை கண்டோம் அதேபோன்று இளைஞர்களை தடுக்காமல் நற்பணிக்கு வழியனுப்பிவிட்டு பிரார்த்தித்த பெற்றோர்களையும் கண்டோம் இவையாவும் மக்கள்மீதான மனித நேயம் அதிகரித்திருப்பதனையே காட்டுகிறது என தெரிவித்தார்
மேலும் அரசியல் ஒரு சாக்கடை என்று கூறிக்கொண்டிருக்க முடியாது அதனை சுத்தம் செய்வதற்கும் காணி, பணம் போன்றவற்றில் வெரித்தனம்கொண்ட ஆசை இல்லாத இளைஞர்கள் மக்களுக்காக முன்வர வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்