அஷ்ரப் ஏ சமத்
இலங்கை பத்திரிகைச் சங்கத்தின் 61வது வருடாந்த மாநாடு எதிா்வரும் ஒக்டோபா் 25ஆம் திகதி பி.பகல் 03.00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மண்டபத்தில் நடைபெறும். இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொள்வாா் அத்துடன் கௌரவ அதிதியாக ஊடக அமைச்சா் ஹயந்த கருநாதிலக்கவும் கலந்து கொள்வாா். இவ் வைபத்தில் 10 சிரேஷ்ட ஊடகவியலாளா்களை ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டு விருதுகளும் வழங்கப்படும்.
என இன்று (18) கொழும்பில் உள்ள ரசியா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் கலந்து கொண்டு பத்திரிகை சங்கத்தின் செயலாளா் உபுல் ஜகத் ஜயசிங்க மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தாா்.
இவ் ஊடகமாநாட்டில் இலங்கை பத்திரிகைச் சங்கத்தின் ஆலோசகர் முதித்த காரியகரனவவும் கருத்து தெரிவித்தாா். இவ் வைபவத்திற்கு முற்று முழுதான ஊடக அனுசரனையை மஞ்சி பிஸ்கட் கம்பணி வழங்குகின்றது. அன்றைய தினம் இந்த நாட்டில் ஊடகத்துறையில் 40 வருடத்திற்கு மேல் சிறந்த சேவையாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளா்களான எம். ஏ. எம் நிலாம், (லேக் ஹவுஸ்) தினகரன் ஆலோசகா், அன்னலச்சுமி இராசதுறை (வீரகேசரி ) ஹென்றி பிரசான்த மென்டிஸ், (நாடக தயாரிப்பாளா்), நிகால் பாரதி (ஜ.ரீ.என்) பிரபா ரணதுங்க (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம்) சிவந்த அர்தாசாத் ருபாவாஹினி, பண்டித்த சிறி திலக்கசிறி (ஊடகவியலாளா் ) வேகல்ல பியதிலக்க (ஊடகவியலாளா் ) ஏ.எஸ் பொ்ணாந்து சிங்கள ஆங்கில மொழி பிராந்திய ஊடகவியலாளா் , என். ஆர். ஜே. ஏரான் ஊடகவியலாளா் ஆகியோா் கௌரவிக்கப்பட உள்ளனா்.
இவ் வைத்தின் போது மஞ்சி பிஸ்கட் கம்பணியின் சந்தைப்படுத்தல் முகாமையாளா் ஊடக அனுசரனைக்கான காசோலையை கையளித்தாா்.