யாழ் முஸ்லீம் மக்களின் தேவைகள் குறித்து நோர்வே அரசாங்கம் அக்கறை!

collage_fotor-1பாறுக் ஷிஹான்

யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள முஸ்லீம்  மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் செயற்றிட்டங்களை எதிர்வரும் 2017 ஆம் முன்னெடுக்கவுள்ளதாக  நோர்வே அரசாங்கத்தின் இலங்கைக்கான அபிவிருத்தி செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளரும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான செயற்பாட்டாளருமாகிய  ஏரன் ஆடன்  தெரிவித்தார்.

நோர்வே அரசாங்கத்தின் இலங்கைக்கான அபிவிருத்தி செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளரும்  இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான செயற்பாட்டாளமான  ஏரன் ஆடன்  உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினர்  இன்று(18)  யாழ்ப்பாணத்திற்கு  விஐயம் மேற்கொண்டனர்.

இதன் போது இக்குழுவினர்  மாவட்ட முஸ்லீம்  மதத்தலைவர்கள் யாழ் முஸ்லீம்  மக்கள் பிரதிநிதிகளை  சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பு  யாழ்   மன்பாஉலும்  முன்பள்ளி பாடசாலை கட்டடத்தில்  நடைபெற்றது.

இதன் போது  முஸ்லீம் மக்களின்  தேவைகள் குறித்து  எதிர்வரும் ஆண்டில்(2017) நாங்கள் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.இதனை ஆராயும்  நோக்கில் எங்களுடைய விஐயம்  தற்போது மேற்கொள்ளப்பட்டது.இவ்விஜயத்தின ஊடாக   நாம் முஸ்லீம் மக்களின் பிரச்சனைகளை கவனத்தில் எடுப்போம்.அந்த வகையில்  இங்கே கூறப்பட்ட பல்வேறு தேவைகள் பிரச்சனைகளை  மிகவிரைவில் ஆராய்ந்து உரிய தீர்வு கிடைக்கப்பதற்கு ஒழுங்குகள்  மேற்கொள்ளப்படும் என  இலங்கைக்கான அபிவிருத்தி செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான செயற் பாட்டாளரும் ஆகிய ஏரன் ஆடன் தெரிவித்தார்.

இச் சந்திப்பில்  யாழ் முஸ்லீம்  மக்களின் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள்  தொடர்பாக மகஜர்  ஒன்றும் யாழ் மாவட்ட முஸ்ஸிம் மக்கள் பிரதிகளினால் நோர்வே அரசாங்கத்தின் இலங்கைக்கான அபிவிருத்தி செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான செயற்பாட்டாளருமான   ஏரன் ஆடனிடம் கையளிக்கப்பட்டது.