மிருகங்களின் பிரதிநிதி ஹிலாரியின் கட்சியினர் தங்களது கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்து விட்டனர்: டிரம்ப்

201610181410143281_america-republican-party-office-on-petrol-bombs_secvpfஅமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஹில்ஸ்பர்க் என்ற இடத்தில் டொனால்டு டிரம்ப் போட்டியிடும் குடியரசு கட்சியின் அலுவலகம் உள்ளது.

இரவு நேரத்தில் அந்த அலுவலகத்தின் ஜன்னல் வழியாக யாரோ சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். அதில் அலுவலகத்தின் ஒரு பகுதி எரிந்து சேதம் அடைந்தது. நாற்காலி உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்தன. ஆனால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்பட வில்லை.

மேலும் அலுவலக சுவரில் ‘நாஜி குடியரசு கட்சியினர் ஹில்ஸ் பர்க் நகரை விட்டு வெளியேற வேண்டும்’ என எதிர்ப்பு வாசகம் எழுதப்பட்டிருந்தது.

trump

இச்சம்பவத்துக்கு அதிபர் தேர்தலின் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மிருகங்களின் பிரதிநிதி ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சியினர் தங்களது கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்து விட்டதாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆனால் குடியரசு கட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு ஹிலாரி கிளிண்டன் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். இது மிகவும் கொடூரமானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.