கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
தற்போது பரீட்சை பெறுபேறுகளை கணனி மயப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை விடைதாள்கள் திருத்தும் பணிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் நடைபெற்றுள்ளது. இப்பணிகளில் 6256 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 2907 பரீட்சை மத்திய நிலையங்களில் 840926 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.