தென்ஆபிரிக்க மண்ணில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்த டி காக் (வீடியோ)

தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் டிகாக் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் 178 ரன் குவித்தார்.

இதன்மூலம் அதிக ரன் எடுத்த தென்ஆப்பிரிக்க வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். அவர் கிப்சை முந்தினார். கிப்ஸ் 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 175 ரன் எடுத்து இருந்தார். கேரி கிர்ஸ்டன் முதல் இடத்தில் உள்ளார். அவர் 1996-ம் ஆண்டு உலககோப்பையில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக 188 ரன் குவித்து இருந்தார்.

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையையும் டிகாக் பெற்றார். இந்திய வீரர் ரோகித்சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

தென்ஆப்பிரிக்க மண்ணில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை டிகாக் பெற்றார்.

https://www.youtube.com/watch?v=MelWEuum6NA