அமைச்சர் ராஜிதவினால் ஆயுர்வேத ஔடத கூட்டுத்தாபனத்தின் முரண்பாட்டை விசாரிக்க குழு

ஆயுர்வேத ஔடத கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை தீர்பப்தற்காக விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

சுகாதார அமைச்சின் நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் பீ.ஜீ.எஸ் குணதிலக தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஆயுர்வேத ஔடத கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் சுகாதார அமைச்சின் சட்ட மற்றும் விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

முரண்பாட்டு நிலமை காரணமாக நாவிண்ணயில் அமைந்துள்ள ஆயுர்வேத ஔடத கூட்டுத்தாபனம் நேற்று முதல் மூடப்பட்டது. 

அதன்படி ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலமையை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்குமாறு விசாரணைக் குழுவிற்கு சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். 

கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சிலர் ஆயுர்வேத ஔடத கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 

தமது பணிகளை ஊழியர்கள் முன்னெடுப்பதற்கு சிலர் தடை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.