மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்

புதியகட்சி ஒன்று குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதனை தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில், மகிந்த தரப்பு ஆதரவாளர்களுக்குஇடையிலான சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. 

இதனையடுத்து, ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

இந்த கலந்துரையாடலின் போது அடுத்தவாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

எனினும், புதிய கட்சி உருவாக்கம் தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் எந்த விதமான கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் தாங்கள் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனேயே இணைந்திருப்பதாகவும்,அது தொடர்பாகவே கலந்துரையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.