அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

plain-green-background-wallpaper-3_fotor

நிந்தவூர் மக்களின் ஆயுட்காலத்தையும் உயிரையும் பறிக்க அசுரவேகத்தில் வளர்ச்சி அடைந்துவரும் அனல் மின்னிலையம் இந்த மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் சராசரியாக 500 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின்சார நிலையமானது வருடத்திற்கு 3.7 மில்லியன் தொன் காபனீரொட்சைட்டை வெளியிடுவதாக கணிக்கப்படுகிறது.இது 161 மில்லியன் மரங்கள் அழிக்கப்படுவதற்கு சமமானதாக பார்க்கப்படுகின்றது. காபனீரொட்சைட் அதிகரிப்பானது மனிதனுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதோடு வெப்ப அதிபரிப்பிற்கும் காலநிலை மாறுபடுவதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றது.

சராசரியாக 500 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின்சார நிலையமானது வருடத்திற்கு 10,000 தொன் சல்பர் டை ஒக்சைட்டையை உருவாக்குகின்றது இது மனிதர்களில் சுவாச நோய்களுக்கும் இதய நோய்களுக்கும் வேறு சில நோய்களுக்கும் காரணமாக உள்ளது. அதேபோல 500 மெகாவாற் மின்சாரத்தை தரும் செய்யும் அனல் மின்சார நிலையம் வருடத்திற்கு 10,200 தொன் நைட்ரஜன் ஒக்சைட்டை வெளியிடுகின்றது. இது மனிதர்களில் நுரையீரல் பாதிப்பிற்கும் சுவாச நோய்களுக்கும் வழிசெய்கின்றது. மேலும் 500 மெகாவாற் மினசாரத்தை பிறப்பாக்கம் செய்யும் அனல் மின்சார திட்டத்தில் வருடத்திற்கு 720 தொன் காபன் மொனொ ஒக்சைட்டை வெளிவருகின்றது. இது மனிதர்களில் தலைவலி, மனவழுத்தம்,இதய நோய்களுக்கு துணை செய்வதாக அறியப்பட்டுள்ளது.

அத்துடன் 500 மெகாவாற் மின்சாரத்தை வழங்கும் அனல் மின்சார நிலையம் வருடத்திற்கு 500 தொன் தூசுகளை வெளித்தள்ளுகிறது. இது மனிதர்களில் சுவாச நோய்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. 500 மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின்சார கட்டமைப்பிலிருந்து வருடத்திற்கு 220 தொன் ஹைட்ரோ காபன்கள் உருவாக்குகின்றது. இதுவும் மனிதர்களில் சுவாச நோயை தோற்றுவிக்கின்றது.

அத்தோடு. சராசரியாக 500 மெகாவாற் மினசாரத்தை உற்பத்தி செய்யும் அனல் மின்சார நிலையமானது வருடத்திற்கு 225 பவுண்ட் ஆசனிக்கையும் 170 பவுண்ட்; பாதரசத்தையும் வேறு இரசாயங்களையும் சூழுலுக்கு வெளிவிடுகின்றது. இத்தகைய இரசானங்கள் மனிதர்களில் இதயநோய்,பக்கவாதம்,புற்றுநோய் முதலானவற்றை ஏற்படுத்தியும் ஈரல். சிறுநீரகம், மூளை முதலானவற்றையும் பாதிப்படையச் செய்தும் இறுதியில் மரணங்களுக்கு வழிகோலுகின்றது.

இதைப்போல அனல் மின்சார உற்பத்தியின் போது வெளியிடப்படுகின்ற வெப்பதினாலும் கழிவு நீரினாலும் சுற்றுச் சூழலில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுகின்றது.  வேளாண்மையும் விலங்கு வளர்ப்பும் இதன் மூலம் பாதிக்கப்படுவதோடு மீன்பிடித் தொழிலிலும் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும். எனவே, அனல் மின்சார நிலையத்தை சம்பூரிலும் அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சி இத்தகைய பாதிப்பக்களிலிருந்து மக்களையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கான பொறுப்பேற்பை செய்யுமா என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வி. இக்கேள்விக்கு என்ன பதில்? பொறுப்புள்ளவர்கள் பொறுப்புடன் சிந்திப்பார்களா?

இந்த விடயம் சம்மந்தமாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு மக்களின் கையெப்பத்துடன் மகஜர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகின்றது இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் 

ஜெமீல் அகமட்