நூற்றுக்கணக்கான யுத்தக் குற்றவாளிகள் பிரித்தானியாவில் சரணடைந்துள்ளனர்

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வௌியேறிய யுத்தக் குற்றவாளிகள் பிரித்தானியாவில் சரணடைந்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. 

பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் சில குறைபாடுகளினால் இவ்வாறான யுத்தக் குற்றவாளிகளை நாடு கடத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

வறிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 135 பேர் இவ்வாறு சரணடைந்துள்ளதாகவும் யுத்த குற்றவாளிகள் தங்களது ஓய்வு காலத்தை பிரித்தானியாவில் கழிக்கும் ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வௌிநாட்டு ஊடகம் ஒன்றில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது. 

இலங்கை, ருவன்டா, சேர்பியா, லிபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான யுத்தக் குற்றவாளிகள் இவ்வாறு பிரித்தானியாவில் சரண் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.