கிழக்கின் எழுச்சி மக்களுக்கு அரசியல் விழிப்பூட்டும் அமைப்பாகவே தற்பொழுது செயற்பட்டு வருகின்றது

https://www.youtube.com/watch?v=xYP3EfMGB50&feature=youtu.be – VIDEO

 

  முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமைத்துவம் பிழையான வழியில் பயணித்து கொண்டிஒருப்பதன் காரணத்தினால் அதற்கான மாற்று வழியானது கிழகில் பிறக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒருமித்த முயற்ச்சியில் இறங்கி செயற்பட்டு வருக்கின்றோம். அத்தொடு நாங்கள் கைகோர்த்து செயற்பட்டு வரும் இந்த வேலை திட்டமானது முற்றிலும் மக்கள் எழுச்சியாகவே இருக்கின்றது. ஆகவே அதனுடைய இலக்கினை எவ்வாறு அடைந்து கொள்வது அல்லது அது எவ்வாறு முன்னேற்றமடைந்து  வெற்றி பெறும் என்பதனை தற்பொழுது எங்களால் நாட் குறிப்பிட்டு கூற முடியாதுள்ளாதாக அம்பாறை மாவட்டத்திலே கிழக்கின் எழுச்சி எனும் தொனிப்பொருளில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமத்துவத்திற்கு எதிராக ஆரமிக்கப்பட்டுள்ள கிழக்கின் எழுச்சியின் தலைவர் வஃபா பாரூக்குடனான நேர்காணலின் பொழுது அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.

azzhoor alif sabry wafa farook kilakkin

மேலும் வஃபா பாரூகிடம் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான சுருக்கமான விடைகளும் அவர் அளித்த விடைகளின் விரிவான காணொளியும் எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.…

கேள்வி:- பெரும் தலைவர் அச்ரஃப் மரணித்து 15 வருடங்களுகு மேலாகியும் இடைப்பட்ட காலத்தில் எழுச்சியினை பற்றி நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை?

வஃபா பாரூக்:- தற்பொழுது இருக்கின்ற தலைமைத்துவத்தின் மீது மக்களினுடைய எதிர்பார்ப்பு தொடர்ந் தேர்ச்சியாக முன்வைக்கப்பட்ட வந்திருந்தது. ஆனால் அண்மைக்காலமாக மக்கள் தலைமைத்துவத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் முற்றிலும் நீங்கியுள்ள நிலையிலேயே நாங்கள் இவ்வாறான எழுச்சியின் மூலம் வேறொரு தலைமைத்துவத்தினை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கேள்வி:- கண்டி மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்ட தற்போதைய தலைவர் ஹக்கீம் அம்பாறையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்துள்ளார். இந்த நிலையில் உங்களினுடைய எழுச்சி அம்பாறையில் வெற்றி பெறுமா?

வஃபா பாரூக்:- கிழக்கின் எழுச்சியானது வெற்றி பெறும் என்பதற்கான முக்கிய காரணம் அதிகார பூர்வமாக ஹக்கீமினை பிரதி நிதியாக ஏற்று கொண்டதற்கு பிறகும் அவரினால் கிழக்கிலுள்ள மக்களுக்கு அரசியல் ரீதியாக எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பதாகும். அதிலும் முக்கியமாக ஹக்கீமிடம் கிழக்கின் அதிகாரத்தினை நாங்கள் வழக்கியதன் பிற்பாடு அதில் எமது மக்கள் தொடர்ந்தேர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்ததன் விளைவே நாங்கள் இந்த எழுச்சிக்கான காரணமாகும்.

கேள்வி:- கடந்த பராளுமன்ற தேர்தலில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசானது அம்பாறை மாவட்டத்தில் கணிசமான தாக்கத்தினை செலுத்தி வருக்கின்றது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

வஃபா பாரூக்:- முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் கட்சியினை பிழையாக வழி நடத்தி செல்கின்றமையினால் மக்கள் மாற்று வழியினை தெரிவு செய்ய முற்படுகின்றனர். அவ்வாறான ஊடுறுவலாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செல்வாக்கினை அம்பாறையில் காணக்கூடியதாக இருக்கின்றது.

கேள்வி:- கடந்த பாராளுமன்ற தேர்தலை விடவும் இம்முறை சிறீலங்க முஸ்லிம் காங்கிரஸ் ஆசனங்களை அதிகமாக அம்பாறையில் வென்றெடுத்துள்ளதே?

வஃபா பாரூக்:- சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் கணிசமான வாக்குகள் ஐக்கிய தேசியக் கிடைத்தது. மூன்று வேட்பாளர்களை களமிறக்கி இம்முறை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டமையினால் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்று ஆசனங்களை வென்றெடுக்க கூடிய வய்ப்பு ஏற்பட்டது. இதனை வைத்து அம்பாறையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கான ஆதரவு அதிகரித்துள்ளது என கூறி விட முடியாது.

கேள்வி:- இந்த கிழக்கின் எழுச்சியின் மூலம் நீங்கள் முஸ்லிம் காங்கிரசிற்கு எதிரான ஏனைய கட்சிகளையும் இணைத்து கொண்டு செயற்பட உள்ளீர்களா? அல்லது தனித்து செயற்பட உள்ளீர்களா?

வஃபா பாரூக்:- கிழக்கின் எழுச்சியானது மக்களுக்கு அரசியல் விழிப்பூட்டும் அமைப்பாகவே தற்பொழுது செயற்பட்டு வருகின்றது. ஆனால் முஸ்லிம் காங்கிரசினுடைய எதேர்ச்சை அதிகாரத்தினை முடிவிற்கு கொண்டு வரும் முகமாக ஏனைய கட்சிகளுடனும் கைகோர்த்து செயற்படும் நிலைமை எதிர் காலத்தில் எங்களுக்கு ஏற்படலாம்.

கேள்வி:- குறுகிய நிலப்பரப்பினை கொண்டுள்ள சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபைக்கான தேவைப்பாடு உண்மையில் இருக்கின்றதா?

வஃபா பாரூக்:-குறுகிய நிலப்பரப்பு என்று சாய்ந்த மருதினை கூற முடியாது. ஆகையால் கல்முனையில் இருந்து பிரிந்து சாய்ந்தமருது தனியான பிரதேச சபை கோறுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சாய்ந்தமருது பிரிவதினால் கல்முனை மாநகர சபையில் உள்ள முஸ்லிம் பெரும் பான்மை இழக்கப்பட கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்பதனையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டி உள்ளது.

கேள்வி:- கல்முனை சாய்ந்தமருது எனும் பிரதேச வாதம் முஸ்லிம் காங்கிரசின் தலைமையின் கீழ்தான் கூறு போடப்பட்டுள்ளதாக கூறும் நீங்கள் கிழக்கிற்கு தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்ற உங்களுடைய எழுச்சியின் நோக்கம் பிரதேச வாதத்தினை அடியொட்டியதாக இருக்கின்றதே?

வஃபா பாரூக்:-கிழக்கிற்கு தலைமைத்துவம் வேண்டும் என்பது பிரதேசவாதம் என்று கூற முடியாது. அது எதார்த்த வாதமாகும். முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமைத்துவம் கிழக்கிற்கு மாற்றப்பட வேண்டும் என்பது எதார்த்தவாதமாகும் என்பது கிழக்கிலுள்ள அணைவரினதும் ஒருமித்த குரலாகவும் உண்மை நிலைப்பாடாகும் இருக்கின்றது.

கேள்வி:- வடகிழக்கு இணைப்பு அல்லது அல்லது இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான தனியான அலகு என்பதில் கிழக்கின் எழுச்சி எந்த நிலையில் உள்ளது?

வஃபா பாரூக்:- வட கிழக்கு இணைக்கப்பட கூடாது என்பதில் நாங்கள் தீவிரமாக செயற்படுகின்றோம். அது சமபந்தமாக பேசுவதற்கு கூட கிழக்கின் எழுச்சி நினைபதில்லை..

கேள்வி:- கரையோர மாவட்டத்தின் தேவைப்பாடு அம்பாறை மாவட்ட மக்களுக்கு இருக்கின்றதா?

வஃபா பாரூக்:- நிச்சயமாக இருக்கின்றது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற கரையோரத்திற்கு ஒரு தனியான நிருவாகமுள்ள கரையோர மாவட்டத்தின் தேவைப்பாட்டின் கோசத்தின் முன்னிலைப்பாட்டுடனான தேவைப்பாடு இருக்கின்றது என்பதே எனது கருத்து.

கேள்வி:- கரையோர மாவட்டம் என்று பார்க்கும் இடத்தில் அம்பாறை மாவட்டத்து முஸ்லிம்களையும் தாண்டி மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வாழுக்கின்ற முஸ்லிம்களின் நிலைமை என்ன?

வஃபா பாரூக்:- மட்டக்களப்பு திருகொணமலை மாவட்டங்களில் தமிழ் பேசகூடிய அரசாங்க அதிபர்களின் நிருவாகங்களே இடம் பெறுகின்றது. ஆனால் அம்பாறையில் மாவட்டத்தில் சிங்கள் பேசகூடிய ஒரு அரச அதிபரினாலேயே நிருவாகம் மேற்கொள்ளப்படுகின்றது. இதுவே நாங்கள் கரையோர மாவட்டத்தினை கேட்பதற்கன முக்கிய காரணமாகும்.

 

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்