அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பரந்த அளவில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்கள் என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பிலும் அரசியல் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இலங்கையின் பொரளாதார நடை பாதை ஊடாக திருகோணமலையை கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளுடன் இணைப்பது தொடர்பில் பிரதமர் கலந்துரையாடியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.