(வீடியோ) சுதந்திர கிழக்கிற்காக ஏறாவூர் விழிப்பூட்டும் கூட்டத்தில் நடந்தது என்ன?

 

கிழக்கு மக்களின் சுதந்திரமான இருப்பு வடக்கும் கிழக்கும் இணைவதில் உள்ளதா. ? வடக்கு வடக்காகவும் கிழக்கு கிழக்காகவும பிரிந்திருப்பதில் உள்ளதா. ? 
இணைப்பின் பாதகம் என்ன. ? தனித்தனியாக பிரிந்திருப்பதன் சாதகங்கள் என்னென்ன. ? இவைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக “ஏறாவூர் சமூக சேவைகள் நற்பணி மன்றம் சுதந்திர கிழக்கு என்னும் பிரகடன எழுச்சி மாநாட்டினை நேற்று வெள்ளிக்கிழமை 02.09.2016 ஆறாவூர் ஆற்றங்கரை டாக்டர் அஹமட் பரீட் மைதானத்தில் மிகவும் உணர்சிபூர்வமான உரைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஆரம் பிக்கப்பட்டு நிறைவடைந்தது.

athaullh uthumaan

குறித்த எழுச்சி மாநாட்டில் கிழக்கினை வடக்கிலிருந்து பிருப்பதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் பிரதம பேச்சராளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொது செயலாளர் YLS ஹமீட். கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் DR அனீஸ், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர்,டாக்டட் உதுமான் லெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமான்லெப்பை மற்றும் புத்தி ஜீவிகள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 

பொதுவாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மற்றும் ஏனைய முக்கிய பேச்சாளர்களின் உரையானது முக்கியமாக வடகிழக்கினை இணைப்பது அல்லது வேறு ஏதாவது அரசியல் அதிகாரங்கள் கிழக்கு முஸ்லிம்களுக்கு கொடுப்பது சம்பந்தமாக தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களோடு பேசுவது என்றல் அவர்கள் முதலில் கிழக்கில் உள்ள முஸ்லிம் தலைமைகளோடு பேசியே தீர்மாணத்திற்கு வரவேண்டும் என ஆணித்தரமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் மாநாட்டிலே வழியுறுத்தப்பட்டது.

மேலும் இன்று எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் பார்வையிடுவதும், பார்த்துவிட்டு அறிக்கைவிடுவதும், அமைச்சரவையில் பேசாபூனையாக இருந்துவிட்டு பாராளுமன்றத்தில் பூச்சாண்டி காட்டுவதுமான ஏமாற்று வேலைகளை மக்கள் இன்று உணர்ந்து விட்டனர். நமது உடமை, உரிமை, உறவு, போன்றவற்றை பாதுகாத்து உறுதிப்படுத்த நமக்கு வெளிநாட்டு சக்திகள் கிடையாது உள்நாட்டில் இருக்கின்ற தலைமைகள் அயல் வீட்டில் இழவு விழுந்தால் நமக்கென்ன, என் பை நிரம்பினால்போதும் என்கின்ற மனநிலையில் உள்ளனர். நமது சமூகத்தின் அடையாளத்தை பாதுகாக்க கடந்த காலங்களில் நாம் செயற்பட்டதுபோல் மீண்டும் எழுவோம் எம்மை மிதித்து நசுக்க நினைக்கும் இரக்கம் இல்லாத வஞ்சகர்கள் போதும் என்று சொல்லும் வரை நாம் போராட புறப்படுவோம்.

 

04

 

தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் கூறி இருப்பது அவர் இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதனை தெளிவாகக் காட்டுகிறது சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழ் பேசினாலும், நாங்கள் முஸ்லிம்கள் என்பதனை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், எங்களது பழக்க வழக்கங்கள், பேச்சு மொழி, கலாச்சாரம் என்பன முற்றாக வேறானதொன்றாகும்.

பெரும்பான்மை சிங்கள மக்களால், சிறுபானமையாக வாழ்ந்த தமிழ் மக்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தர்களோ, அதனை விட அதிகமான துன்பங்களை வடக்கில் வாழும் பெரும்பான்மை தமிழ் மக்களினால் முஸ்லிம் மக்கள் அனுபவித்தார்கள் என்பதனை சம்பந்தனால் மறுக்க முடியுமா? இனியும் எம்மக்களால் தமிழ் தலைமைகளை நம்ப முடியாது  இன்னுமொரு முறை சோதித்துப் பார்க்க நாங்கள் முட்டாள்களும் இல்லை. ஏனென்றால், நாங்கள் சூடு கண்ட பூனைகளாக இருப்பதோடு, இரவோடு இரவாக வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது இன்றுள்ள அணைந்தது தமிழ் தலைமைகளும் இறந்து போகாமல் உயிருடன்தான் இருந்தனர்,அவர்களில் ஒருததருக்குகூட இது தவறு முஸ்லிம்களும் மனிதர்கள்தான் எனகூற நாவு துடிக்காதது உங்களின் வரண்டுபோன இதயத்தைக்காட்டுகிறது.

 

05

இன்று வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு அரசியல் அதிகாராம் அணைத்தும் வடக்கிற்கு கொடுக்கப்பட வேண்டும் என எனக்கூறும் தமிழரசு கட்சியும் , வடக்கு கிழக்கு சேதாரமில்லை இணைக்கப்படுமால் அது பற்றி பேசுவதற்கு நாங்கள் தயார் என கூறும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அப்துர் ரவூப் ஹக்கீமும் வரலாறுகளை திரும்பிப் பாருக்க வேண்டும். உங்களுக்கு எத்தனை உதாரணங்கள் வேண்டும்.பள்ளிவாயல்களுக்குள் முஸ்லிம்கள் சுடப்பட்டது, வயல்காணிகளுக்கு கப்பம் அறவிட்டது, முஸ்லிம் வீடுகளுக்குள் புகுந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு என மூச்சு விடாமல் எங்களால் உதாரனங்களையும், சம்பவங்களையும் கூற முடியும். உங்களை நாங்கள் பல முறை சோதித்துப் பார்த்து விட்டோம் நீங்கள் தங்கமல்ல ஆகவே போலியை இன்னு ஒரு முறை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

03

கடல் நீர் என்ற அடிப்படையில் கருங்கடலும் செங்கடலும் ஒட்டி இருந்தாலும் இரண்டற கலக்காமல் தனித்தனியாக இருப்பது போன்று இருக்கவே எமது முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர், அதனால்தால் விருப்பத்துக்கு மாறாக இணைக்கப்பட்ட வடகிழக்கு சட்டரீதியாக பிரிக்கப்பட்டதன் பின்பு மீண்டும் இணைப்பது என்பது உங்கள் கனவாக இருந்து விட்டுப்போகட்டும்.மாறாக இணைப்பதற்கு முற்பட்டால் அதனை தடுத்து நிறுத்த எமது வீரமிக்க இளைஞ்சர்களும் மக்களும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை சம்பந்தன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்ள நாங்கள் விரும்புகின்றோம் என்பதே சுதந்திர கிழக்கிற்காக கண் திறப்போம் நம் மண் காப்போம் எனும் எழுச்சி மாநாடானது ஏறாவூரிலிருந்து கிழக்கில் வாழும் மக்களுக்கு மட்டுமல்லாமல் தேசியத்திற்கே எடுத்துக்கூறியது.

 

ஓட்டமாவடி அஹமட் இர்ஷட்.

0 0 votes
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
M.H.A.SAMAD
M.H.A.SAMAD
8 years ago

அண்மையில் ஒரு படத்தில் .அமைச்சர் ரவூப் அவர்கள் பால்காரன் மாதிரியான வேசமிட்டு நடன மாடுவதை கண்டேன் ஏன் என்றால் அம்பாறை மாவட்டதில் உள்ள மாடுகளுக்கு அவரே சொந்தக்கரர்போல தெரிகிறது அவர் அந்த மாடுகளை விற்பார் வாங்குவார் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்