முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வருக்கு விளக்கமறியல்

ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை எடுத்துச் சென்றமை மற்றும் தம்வசம் வைத்திருந்தமை சம்பந்தமாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேக நபரான வாஸ் குணவர்தனவின் மனைவி ஷைமலரி குணவர்தனவுக்கு எதிரான வழக்கை 2017ம் ஆண்டு பெப்ரவரி 16ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஷைமலி குணவர்தன ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் வாஸ் குணவர்தனவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.