உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது

12AUGK1_Fotor

யுரேசிய பொருளாதார ஒன்றியத்தின் ‘Astana EXPO-2017’ என்ற மிகப் பெரிய உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் தலைநகரான ஆஸ்தானவில் நடைபெறவிருக்கும் இக் கண்காட்சியில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பார்வையாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளார்கள்.. இலங்கைளின் ஏற்றுமதி பொருட்களின் மாதிரி மூன்று மாத காலம் வரை காட்சிக்கு வைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பு 3 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உத்தியோக பூர்வ காரியாலயத்தில் இடம்பெற்ற கண்காட்சி செயற்பாட்டு ஆணைக்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் புது டில்லியை தளமாக கொண்டு அமைந்துள்ள கஸகஸ்தான் தூதரகத்தின் இலங்கைக்கான தூதுவர் புல்லட் சார்சென்பயர் உட்பட இரு நாடுகளினதும் உத்தியோக பூர்வ அதிகாரிளும் கலந்துக்கொண்டனர்.

மேற்படி இக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்: தற்போது மிக குறைந்த 5 மில்லியன் அமெரிக்க டொலர் இருதரப்பு வர்த்தகத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் புதிய வர்த்தகத்தினை ஆரம்பிப்பதற்கு ஆஸ்தான எக்ஸ்போ 2017 ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக உள்ளது. இலங்கை மற்றும் கஸகஸ்தான் இடையேயான எதிர்வரும் எக்ஸ்போ 2017 உடன்பாடு எட்டப்பட்டப்பட்ட பின்பு இருநாடுகளினதும் உயர் அந்தஸ்து பெற்ற உத்தியோக பூர்வ அதிகாரிகள் கைச்சாத்திட்டனர்.

தற்போது கஸகஸ்தான் இலங்கையுடனான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட தனது ஆர்வத்தினை முழுமையாக காட்டிவருகிறது. எனவே, கஸகஸ்தான் இலங்கையின் நம்பிக்கைக்குரிய புதிய சந்தைக்கான முதல் நுழைவாயில் என்று இங்கு சுட்டிக்காட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் இருதரப்பு வர்த்தகத்தினை பொறுத்தவரை மிக குறைந்த 5 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்ட நிலையில் தற்போது கஸகஸ்தான் இன்னும் சாத்திமான ஒரு கன்னி சந்தையாக உள்ளது என்பதை காட்டுகிறது

யுரேசிய பொருளாதார ஒன்றியத்தின் ‘Astana EXPO-2017’ என்ற மிகப் பெரிய உலகளாவிய ஏற்றுமதி கண்காட்சியில் இலங்கை இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் தலைநகரான ஆஸ்தானவில் நடைபெறவிருக்கும் இக் கண்காட்சியில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பார்வையாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளார்கள். இலங்கைளின் ஏற்றுமதி பொருட்களின் மாதிரி மூன்று மாத காலம் வரை காட்சிக்கு வைக்கப்படும் என்றார் அமைச்சர் ரிஷாட்.

கஸகஸ்தான் தூதரகத்தின் இலங்கைக்கான தூதுவர் புல்லட் சார்சென்பயர் கருத்து தெரிவிக்கையில்: கஸகஸ்தானில் நடைபெறவுள்ள ஆஸ்தான எக்ஸ்போ 2017 கண்காட்சியில் இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு சிறந்த ஆரம்பமாக காணப்படும். ஜூன் 10 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் கண்காட்சியில் சில அமெரிக்கா தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மூன்று மாத காலம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் சுமார் ஐந்து மில்லியன் பார்வையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். மிக சிறப்பாக நடாத்தப்படவிருக்கும் இந்த எக்ஸ்போ கண்காட்சிக்காக நாம் ஒரு தனி நகரம், விமான நிலையம், மற்றும் ரயில் நிலையம் ஆகியனவற்றை நிர்மானிக்கவுள்ளோம். 300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஒரு எக்ஸ்போ கிராமத்தினை உருவாக்கிய பின்னர் அதனை நாம் ஒரு சர்வதேச நிதி மையமாக மாற்றவுள்ளோம். இக்கண்காட்சியில் எரிசக்தி மீதான விசேட கவனம் அதிகம் காணப்படுவதால் கஸகஸ்தான் எரிசக்தி அமைச்சர் அனைத்து பங்கேற்கும் நாடுகளின் அமைச்சர்களுக்கான அமைச்சரவை கூட்டத்தினை நடத்தவுள்ளார்..

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று கஸகஸ்தானுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இது எக்ஸ்போ- 2017 இருதரப்பு வர்த்தக சந்திப்புக்ளை ஏற்படுத்தவும் வர்த்தக உறவுகளை புதுப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். வர்த்தக திணைக்களத்தின் புள்ளி விபரபடி, 2015 ஆம் ஆண்டில் இலங்கை- கஸகஸ்தான் இருதரப்பு வர்த்தகம் 4.8 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவில் இருந்தது.