இருபத்திரண்டு நாடுகளுக்கான வதியாத உயர்ஸ்தானிகர்களை நியமிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த 22 நாடுகளில்.நியூசிலாந்து, பிஜி(Fiji), செக் குடியரசு, ஹங்காரி, சிலி, பேரு, மொரக்கோ, பல்காரியா,கஸகஸ்தான், மௌர்டியஸ், பொட்ஸ்வானா,கம்போடியா,Senegal, Ghana,தன்சானியா,அயர்லாந்து மற்றும் வத்திக்கான் ஆகிய நாடுகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்படும் உயர்ஸ்தானிகர்கள் இலங்கையில் இருந்தே தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு சில விடயங்களுக்காக மாத்திரம் வேறு நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாக்களை வழங்குவதே இவர்களின் முக்கிய பொறுப்பாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.