ஈராக்கில் கடந்த 2014-ம் ஆண்டு தெஹ்ரிக் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் ராணுவத்தினர் சுமார் 1700 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். பின்னர் அவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்தனர். இதற்கு ‘ஸ்பெய்செர்’ படுகொலை என அழைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஈராக் அரசு விசாரணை நடத்தி வந்தது. அப்போது சிலர் இதில் ஈடுபட்டிருப்பது கண்பிடிக்கப்பட்டது. அதில் 36 பேருக்கு ஈராக் அரசு இன்று மரணதண்டனை வழங்கியது. இந்த தகவலை நசிரியாஹ் மாகாணத்தின் தலைநகர் திஹர் கவர்னர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈராக் அதிபரின் உத்தரவையடுத்து இவர்கள் அனைவரும் கடந்த வாரம் நசிரியாஹ் மாகாணத்திற்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.