நாட்டிலே இருக்கின்ற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றி பார்க்க வேண்டும் கிராம மக்கள் மத்தியிலே பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்த நாட்டின் அரச தலைவர்களிடத்திலே இருக்கினறது என்று கிராமிய பெருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிதெரிவித்தார்.
பிரதி அமைச்சரின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியின் மூலம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்கள், பாடசாலைகள் பொது அமைப்புக்கள் என்வற்றுக்கு பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வும் கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்வும் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற வேளை அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருவரிடத்திலும் இந்த நாட்டிலே இருக்கின்ற மக்கள் மத்தியிலே பணப்புழக்கத்தை ஏற்படுத்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேற்பிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் அதன் கட்டமைப்பிலே கிராமிய பொருளாதார அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்திலே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அதிகமான நிதியினை ஒதுக்கியுள்ளது.
நல்லாட்சி ஏற்பட்டு நல்ல விடயம் நடக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பினாலும் கூட கடந்த ஆட்சியாளர்கள் பட்டுப்போன கடனுக்கு வட்டி கட்டுவதிலே மிகுந்த சிறமமாக இருக்கின்றது பெற்றவர் பெற்ற கடன் பிள்ளைகளைச் செரும் என்பதைப் போல கடந்த ஆட்சியாளர்கள் பட்ட கடனை இந்த நல்லாட்சியிலே கடனை அடைக்க முடியாது வட்டியையாவது கட்டி முடிப்போம் என்கின்ற நிலவரத்தில் அரசாங்கம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
பிரதி அமைச்சரின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியின் மூலம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்கள் பாடசாலைகள் மீன் பிடி அமைப்புகள் என பதினைந்து பத்தொன்பது அமைபபுக்களுக்கு பதிநான்கு லட்சம் ரூபா பெறுதியில் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொலநறுவை மாவட்டத்தில் இடம் பெற்ற கராத்தே திறந்த போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற கல்குடா கராத்தே விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதக்கங்களை அனிவித்து சான்றிதழும் வழங்கி வைத்தார்.