நிந்தவூரில் முஅத்தின்களுக்கான பயிற்சிப் பட்டறை

சுலைமான் றாபி

 நிந்தவூர் நலன்புரிச் சபையின் ஏற்பாட்டின் கீழ் அதன் சமய கலாச்சாரப் பிரிவின் அனுசரணையுடன் நிந்தவூரில் காணப்படும் பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தின்களுக்கான தொடர் பயிற்சிப் பட்டறை இன்றைய தினம் (20) நிந்தவூர் மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசலில் ஆரம்பமானது.

20160820_105544

முஅத்தின்களின் மாண்பும், அவர்களின் பொறுப்புக்களும் கடமைகளும் எனும் தலைப்பில் ஆரம்பமான இந்தப் பயிற்சிப் பட்டறையை நிந்தவூர் நலன்புரிச் சபையின் தவிசாளரும், முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான எம்.எச்.யாக்கூப் ஹசன், சமய கலாச்சாரப் பிரிவின் பணிப்பாளர் அஷ்-ஷேஹ் மெளலவி ஏ.எம்.அஸ்ஹர், திட்ட இணைப்பாளர் உமர் அலி உள்ளிட்ட நலன்புரிச் சபையின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இதே வேளை இந்தப் பயிற்சிப் பட்டறையில் சர்வதேச கிறா அத் போட்டியில் இலங்கை சர்பாக போட்டியிட்டு 03 வது இடத்தினைப் பெற்ற அல்-ஹாபிழ் ஏ.எம்.இஸ்ஹாக் அவர்களினால் சிறந்த முறையில் அதான் சொல்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டதோடு, இந்தப் பயிற்சிப் பட்டறையானது இம்மாதம் 20,21, 27, 28 மற்றும் செப்டம்பர் மாதம் 08ம் திகதி வரை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை இடம்பெறவுள்ளதோடு இந்நிகழ்வின் இதியில் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளதாக கலாச்சாரப் பிரிவின் பணிப்பாளர் அஷ்-ஷேஹ் மெளலவி ஏ.எம்.அஸ்ஹர், தெரிவித்தார்.

IMG-20160820-WA0001