அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதான அபிவிருத்தியில் நடைபெற்ற ஊழல் அம்பலம்

எம்.ஐ.பயாஸ்  
 
 
அண்மையில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மண்ணிட்டு நிரப்பும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாகியும் அந்நடவடிக்கை முடிவுறுத்தப்படாது இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்நிலை ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
 
addalaich public ground 
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் முதலமைச்சரினால் அட்டாளைச்சேனை அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தினை பிரதேச சபையின் சொந்த நிதியிலிருந்து மண்ணிட்டு நிரப்பி அபிவிருத்திசெய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவ்வனுமதியின் அடிப்படையிலேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
 
ஆனால் அச்செயற்பாட்டின்போது உரிய சட்டதிட்டங்கள் பின்பற்றப்படாததோடு, மைதானத்திற்கு உகந்த மண்ணும் இடப்படவில்லை என்பதே பிரதானமாக இத்திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்;டுள்ளதற்கு காரணங்களாகும்.
 
 
பிரதேச சபை!டாக ஒரு அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இருந்தால், அது இரு வகையில் செயற்படுத்தப்படலாம். ஒன்று, பிரதேச சபை தனது வளங்களை உபயோகித்து, நேரடியாக பொருள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்து அத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது. இரண்டாவது, குறித்த வேலையினை ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தகாரர் ஒருவருக்கு வழங்குவது. 
 
 
இவ்வேலைத்திட்டமானது, பிரதேச சபையினால் தனது வாகனங்கள் மற்றும் ஆளணியிரைப் பயன்படுத்தி, நேரடியாக தேவையான மண்ணை கொள்வனவு செய்து நிறைவேற்ற முடியுமான ஒன்று என்பதனால், அவ்வாறு இத்திட்டத்தினை முன்னெடுப்பதன் மூலம் ஒப்பந்தகாரரூடாக நிறைவேற்றுவதனை விடவும் இருமடங’கு வேலையினை நிறைவேற்ற முடியும் என்ற விடயம் ஊடகங்கள் வாயிலாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
 
 
மாகாண சபையின் அனுமதி இத்திட்டத்திற்காக கிடைத்திருந்தபோதிலும்கூட இத்திட்டத்தினை நேரடியாக பிரதேச சபை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அதேவேளை, ஒப்பந்தகாரர் ஒருவருக்கு இவ்வேலைத்திட்டத்தினை வழங்குவதற்காக கேள்விச்சபைக் கூட்டமோ அல்லது தீர்மானமோ மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆக, இவ்வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த தனக்கிருந்த இரு வழிகளிலும் பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை. ஆனால், இவ்வேலைத்திட்டத்திற்கான செலவு மதிப்பீட்டு அறிக்கை மாத்திரம் தொழிநுட்ப உத்தியோகத்தர்களால் தயாரிக்கப்பட்டிருந்தது. 
 
 
இவ்வாறானதொரு நிலையில் மைதானத்தினுள் பாரஊர்திகளின் மூலம் மண் இடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மாத்திரமன்றி அந்நடவடிக்கை பிரதேச சபை தொழிநுட்;ப உத்தியோகத்தர்களின் கண்காணிப்பின் கீழேயே நடைபெற்றுள்ளது. 
 
 
அத்தோடு மைதானத்தில் இடப்பட்ட மண் மைதாத்தில் இடுவதற்கு பொருத்தமற்றது என்ற கருத்தும் விளையாட்டு வீரர்களால் முன்வைக்கப்பட்டது. இதன்காரணமாகவும், பிரதேச சபை இவ்வேலைத்திட்டத்தினை நேரடியாக முன்னெடுக்க வேண்டும் என்ற ஊடகங’கள் வாயிலான கோரிக்கை காரணமாகவும் கணக்காய்வு உத்தியோகத்தர்கள் இவ்விடயத்தினை தமது ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். அவர்களது ஆய்வு நடவடிக்கையின்போதே இத்தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
 
 
மைதானத்தில் இடப்பட்ட மண் மைதானத்திற்கு பொருத்தமானதுதானா அல்லது செலவு மதிப்பீட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டட மண்வகைதானா என்பது தொடர்பாக ஆராய்வதற்காக மண்ணின் ஒரு பகுதி கணக்காய்வு உத்தியோகத்தர்களால் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
 
இதேவேளை, இடப்பட்ட மண்ணில் 35 டிப்பர் லோடுகள் செலவு மதிப்பீட்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட மண்வகை அல்லவெனவும், அவற்றை தாம் நிராகரித்துள்ளதாகவும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் அறிக்கை செய்துள்ளதாக அறியக்கிடைக்கிறது. செலவு மதிப்பீட்டு அறிக்கையின்படி ஒரு டிப்பர் மண்லோடு கிட்டத்தட்ட 11000 ரூபாய் ஆக மதிப்பிடப்பட்டிருக்கும் அதேவேளை மைதானத்தில் இடப்பட்ட டிப்பர் மண்லோடு சுமார் 3000 ரூபாவுக்கே பெறக்கூடியதாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
எந்தவொரு ஒப்பந்தகாரருக்கும் வேலையினை வழங்க சபையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கவுமில்லைஃ நேரடியாக பிரதேச சபை வேலையினை மேற்கொள்வதற்காக மண் கொள்வனவு செய்ய கூறுவிலை கோரப்பட்டிருக்கவுமில்லைஃ ஆனால் முகமறியாத ஒருவர் மைதானத்திற்குள் மண் இட்டுள்ளார்ஃ அதனை பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள்  மேற்பார்வை செய்துள்ளனர்ஃ இதிலிருந்து பிரதேச சபையின் செயலாளர் சட்டத்திற்கு புறம்பாக, பொருத்தமற்ற மண் இடுவதற்கும் அனுமதித்து, மைதானத்தில் மண் இட அனுமதிக்குமாறு மைதான காவலாளிக்கும் உத்தரவிட்டு, தனது தொழிநுட்ப உத்தியோகத்தர்களை அங்கு மேற்பார்வைசெய்வதற்கும் உத்தரவிட்டுள்ளார் என்றே கருதவேண்டியுள்ளது. 
 
 
செயலாளர் தானாகவே இவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது அவர் மீது ஏதும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதனால் இவ்வாறு செயற்பட்டாரா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
 
 
இவ்வாறான குழப்பங்களுக்குள் சிக்கி, மாகாண அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் பிரதேச சபையின் நிதியின் மூலம் சிறப்பாக விளையாட்டு வீரர்களுக்கு பயன்படும் வகையில் முன்னெடுக்கப்பட இவ்வபிவிருத்தித் திட்டம் இன்று இடைநடுவில் தடைப்பட்டுள்ளதோடு விளையாட்டு வீரர்களுக்கும் தமது விளையாட்டு நடவடிக்கையினை மேற்கொள்ள இடைஞ்சலாகவும் காணப்படுகிறது. 
 
 
தனிப்பட்ட நபர்களின் நன்மைகள் மாத்திரம் கருத்திற்கொள்ளப்படும்போது பொதுவிடயங்கள் புறந்தள்ளப்படுவதை பொதுமக்கள் கேள்வி கேட்க முற்படாதவரை, இவ்வாறான செயற்பாடுளை தடுத்து நிறுத்த முடியாது என்பதே இவ்வாறான செயற்பாடுகள் எமக்கு எடுத்தியம்புகின்ற விடயமாகும்.