நிந்தவுர் பிரதேச உணவக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

 

 ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் 

நிந்தவுர் பிரதேசத்திலுள்ள சாப்பாட்டுக் கடைகள், பேக்கரிகள் போன்றவற்றில் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதாக பொது மக்கள்கொடுத்த புகாரைத் தொடர்ந்து சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும், பிரதேச சபையும் துரித நடவடிக்கைகளில்குதித்துள்ளனர்.

IMG_2450_Fotor

நிந்தவுர் பிரதேச சபையும், நிந்தவுர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து நிந்தவுர் பிரதேச உணவகஉரிமையாளர்களுக்கு  ‘சுகாதாரம் பேணலும், ஆரோக்கிய உணவும்’ எனும் தலைப்பிலான   விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றைஇன்று நடாத்தியது.

 

இக்கருத்தரங்கில் நிந்தவுர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.தஸ்லீமா பசீர், நிந்தவுர் பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவிஆணையாளர் எம்.ஜௌபர், பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர், வருமான பரிசோதகர் எம்.சலீம், மேற்பார்வைபொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ.எம்.சித்தீக், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எம்.ஏ.அப்துல் ஹமீட், எம்.ஐ.எம்.மன்சூர்,நிந்தவுர் பிரதசத்திலுள்ள தேநீர்க்  கடை, சாப்பாட்டுக்கடை உரிமையாளர்கள், பிரதான உணவு தயாரிப்பாளர்கள் எனப் பலரும்கலந்து கொண்டனர்.

 

பொது மக்களைப் பாதுகாக்கக் கூடிய வகையில் எவ்வாறு சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்க வேண்டும்? உணவு தயாரிப்பின்போது தயாரிப்பாளர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்?, சுகாதாரமான உணவுகள் தயாரிக்கும் போது எவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்?, உணவுகளில் நோய்க் கிருமிகள் தொற்றாது எவ்வாறு பாதுகாப்பது? இவற்றில் உரிமையாளர்களின் வகிபாகம்? இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் எவ்வாறு தண்டிக்கப்படுவர்? இவைகளிலிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறலாம் போன்ற பல்வேறுவிடயங்கள் விலாவாரியாக எடுத்துக் கூறப்பட்டன. 

IMG_2440_Fotor

‘இக்கருத்தரங்கின் பயன்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிந்தவுர்ப் பிரதேசத்தில் வாழும் சுமார் 50 ஆயிரம் மக்களின் சுகாதாரத்தைப்பாதுகாக்க முடியும்’ என பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் தெரிவித்தார்.