இலங்கையின் அமைதிச்சூழலை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்: அமீர் அலி

அஸாஹிம் 

வெளிநாட்டு  முதலீட்டாளர்கள்  இலங்கையில்  முதலீடு  செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது இலங்கையில் அமைதிச்சூழல் நிலவுகின்றுது பல்வேறு தொழிற்துறைகளுக்கான கேள்வியும் சாதகமான  காலச்சூழலும்  ஏற்பட்டுள்ளது. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள்  நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள  வேண்டும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள்  பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

ameer ali

நாட்டில் தற்போது நிலவுகின்ற வேலை வாய்ப்பு பிரச்சினை தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகம் முதலீடுகளை செய்ய வைப்பதன் மூலம் இலங்கை பொருளாதார  அபிவிருத்தியில் முன்னேற்றம் அடைவதோடு வேலைவாய்ப்புப் பிரச்சினையும் அதிகளவு தீர்க்கக்கூடியதாக இருக்கும்.
கடந்த 30 வருடகால யுத்தத்தின் பின்னர் சமாதானம் நிலவுகின்ற அழகிய பூமியாக இலங்கை  மாறியுள்ளது. தற்போது சுற்றுலாத்துறையின்  மூலம்  இலங்கைக்கு அதிகளவான வருமானம் கிடைக்கின்றது அதற்கான மூல காரணம் தெற்காசியாவில் மிகவும் சிறந்த இடத்திலே அழகான பூமியாக இலங்கை அமைந்திருப்பதாகும் சுற்றுலாத்துறையைப் போன்றே ஏனைய உற்பத்தித்துறைகளிலும் இலங்கை தன்னிறைவை அடையவேண்டும் என்பதே இந்த அரசின்  மிகமுக்கியமான நோக்காகும்.

அந்த வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் முதலீடு செய்யத் தூண்டுகின்ற செயற்பாடுகளை இந்த அரசுமேற்கொள்கின்றது எதிர்காலத்தில் இது வெற்றியடையுமிடத்;து பாரிய தொழிற்சாலைகளை இலங்கையில் நிறுவுவதன் மூலம் அதிகூடிய வேலைவாய்ப்பினை எமது நாட்டில் வழங்கக் கூடியதாக இருக்கும்.
படித்த  இளைஞர்கள்  அனைவரும்  அரசாங்க வேலையைத் தேடியே  ஓடுகின்றனர்.  அரசே தமக்கான தொழில்வாய்ப்பைத் தரவேண்டும் என்று வரிசையில் நிற்கின்றனர். அரசதுறைகளில் போதிய வெற்றிடங்கள் இல்லாதவிடத்து இவர்களுக்கான வேலைவாய்ப்பை தனியார்துறைகளில் தேடிக்கொள்வதே மிகச்சிறந்த நடவடிக்கையாக அமையும்.

அரச துறையிலும் பார்க்க இன்று தனியார் துறைகளில்  கவர்ச்சிகரமான  சம்பளமும் தொழிலாளர் மேம்பாட்டு  நலத்திட்டங்களும் அதிக மதிகம்  காணப்படுகின்றன எனவே இளைஞர்கள் யுவதிகள்  தமது  திறமைகளை  தனியார் துறைகளிலும்  முதலீடு  செய்ய  முன்வர வேண்டும் அப்போது தான்  நமது  நாடு  துரிதமாக  அபிவிருத்தியை அடையும்  நமது  நாட்டிலிருக்கின்ற  மிகப்பெரிய  பிரச்சினை  வேலையில்லாப்  பிரச்சினையாகும் இந்தப்பிரச்சினைக்கு அரசினால்   உடனடியான   தீர்வினை   வழங்க   முடியாதென்பது   வெளிப்படையான உண்மையாகும் அந்தவகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையும் புது வகையான தொழிற்சாலைகளின்  அமைவும்  இலங்கையை  புதிய  மாற்றங்களுடான அபிவிருத்திப்; பாதைக்கு இட்டுச்செல்லும் என நம்பலாம்.

எல்லாத்துறைகளிலும்  இளைஞர்களும்  யுவதிகளும்  தமது திறமைகளைப்  பயன்படுத்தி  நாட்டின் முன்னேற்றத்திற்கு  தம்மாலான  சேவைகளைச் செய்ய வேண்டும் அரச துறை தொழில்வாய்ப்புகளை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல் தனியார் துறைகளிலும்  தொழில் வாய்ப்புகளைப்பெற்று இயங்குவதன் மூலம் வேலையில்லாப்பிரச்சினை   தீர்வதோடு   தொழில்நுட்ப   ரீதியான   முன்னேற்றத்தையும்   எதிர்காலத்தில் அடையமுடியும் என அவர்தெரிவித்தார்.