அஷ்ரப் ஏ சமத்
மட்டக்களப்பு மண்முனைப் பிரதேச செயலாளா் பிரிவில் வீடுகள் அற்ற 422 குடும்பங்களுக்கு 670 இலட்சம் ருபா நேற்று(13) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் பகிா்ந்தளிக்கப்பட்டது. அத்துடன் தத்தமது வீடுகளை சீமெந்தினால் புசிக்கொள்வதற்காக 19 இலட்சம் ருபா பெறுமதியான சீமெந்து பக்கட்கள் 215 குடும்பங்களுக்கும் பகிா்ந்தளிக்கப்பட்டது. அத்துடன் 83 இளைஞா் யுவதிகளுக்கு சுயதொழில் மேற்கொள்ள கட்டுமான நிர்மாணத்துறையில் உதவிகள் அளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கிழக்கு முதலமைச்சா் நசீா் அஹமட், பிரதியமைச்சா் அமீா் அலி, மற்றும் பிரதேச பாராளுமன்ற உறுப்பிணா்கள் அரச அதிபரும் கலந்து சிறப்பித்தனா்.
இங்கு உரையாற்றிய அமைச்சா் சஜித் பிரேமதாச –
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த அரசாங்கம் காணமற் போனோருக்கு ஒரு செயலகம் ஒன்றை நிறுவி அதன் ஊடக இந்த நாட்டில் காணாமல் போனோா்களுக்கு நிவாரணம், அவா்களது முறையீடுகள், என்பதனை கவணிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டபோது மஹிந்த ராஜபக்சவின் எதிா்க்கட்சி கூட்டணி நடந்து கொண்ட முறையைப்பாா்த்து நாம் வெட்கிக் தலைகுணிகின்றோம். இதன் மூலம் ஒருபோதும் இந்த நாட்டுக்கு சுதந்திரத்தையும் சமாதாணத்தையும் பெற்றுக் கொடுத்த இரானுவத்தினரையோ பாதுகாப்பு பிரிவினரையோ தண்டனை வழங்குவதற்காக இந்த செயலகம் நிறுவ வில்லை.
கடந்த காலத்தில் மகிந்த ராஜப்கச அணியினா் இந்த நாட்டில் அவா்கள் குட்டிச் சுவராக்கி எவ்வாறெல்லாம் அசர சொத்துக்களை கொள்ளையடிக்க முடியுமோ அந்த அளவுக்கு கொள்ளையடித்துள்ளனா். அது மட்டுமல்ல கொழும்பினை ரேஸ் விளையாட்டு மைதானமாக ராஜபக்சவின் மகன்மாா்கள் விளையாடினாா்கள். நினைத்தவாறெல்லாம் தனது தந்தையின் பதவியை பாவித்து பொதுச் சொத்துக்களை சூரையாடியுள்ளனா். எனத் தெரிவித்தாா்.
எதிா் வரும் டிசம்பர் மாத்தில் மேலும் 3 வீடமைப்புக் கிராமங்களை மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன அவைகள் மக்களிடம் கையளிக்கப்படும்.என அமைச்சா் சஜித் அங்கு தெரிவித்தாா்.