க.கிஷாந்தன்
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவைக்கு அதிகமான சம்பள உயர்வை உனடியாக வழங்குவதற்கும், காணி மற்றும் வீட்டுரிமைகளை வழங்கி உரிமை உடையவர்களாக தொழிலாளர்களை மாற்றுவதற்கு அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க ரீதியில் நடவடிக்கைகளை எடுக்கபட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து 14.08.2016 அன்று அட்டன் நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தினை செட்டிக் நிறுவனம் ஏற்பாடுகள் செய்திருந்தது. அட்டன் நகரின் கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து ஊர்வலமாக பதாதைகளை ஏந்திய வண்ணம் நடை பவனியாக 100ற்கும் அதிகமானோர் பிரதான நகரான அட்டன் நகரத்தை நோக்கி வருகை தந்து நகரத்தின் பிரதான பஸ் தரிப்பிடத்தில் போராட்டத்தை நடத்தினார்கள்.
இவ்வேளையில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான பொதுமக்களின் கையெழுத்தும் பெறப்பட்டமை குறிப்பிடதக்கது.
இதன்போது தோட்ட தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள உயர்வினை தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தும் படி அழுத்தம் கொடுக்கும் முகமாகவே இப்போராட்டம் குறித்த நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.