அக்கரைப்பற்றில் முதன்முறையாக முஅத்தின் , பணியாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

 
ஏ.எல்.ஆஸாத் – சட்டக்கல்லூரி
 
 கருங்கொடி வெல்பெயா போரமின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களில் முஅத்தின் மற்றும் பணியாளர்களாக கடமை புரிந்து கொண்டிருக்கும் சுமார் 45 இறை அர்ப்பணிப்பாளர்கள் கருங்கொடி மகுட உன்னத விருது மற்றும் அன்பளிப்பு பொருட்கள் என்பன வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
 
கடந்த 19.07.2016 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு அக்கரைப்பற்று கடற்கரை திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள் என சுமார் 400ற்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
கட்டார் நாட்டில் தொழில் புரிந்துகொண்டிருக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளம் வயது முதல் சமூக சேவையில் தன்னை முற்றுமுழுதாக அரப்பணித்து செயற்பட்டு வரும் முன்னாள் ர்நுளுளுழு தலைவர் ஆ. தமீம் அவர்களின் பூரண அனுசரணையில் கருங்கொடி வெல்பெயா போரமின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்  u. ரகுமத்துல்லா தலைமை வகிக்க திருகோணமலை மாவட்ட நீதிபதி அல் ஹாபிழ் NM அப்துல்லா அவர்கள் பிரதம அதிதியாய் கலந்து சிறப்பிக்க, இப்னு உமர் இஸ்லாமிய கற்கை பீட விரிவுரையாளர் அஷ்ஷேய்க், அல்ஹாபிழ், முப்தி முஹம்மட் ஹூஸ்னி மற்றும் பாதிஹ் கற்கை நிறுவன பணிப்பாளர் அஷ்ஷேய்க் யுஆ அக்ரம் நளீமி ஆகியோர் விஷேட பேச்சாளர்களாகவும், திணைக்களத் தலைவர்கள் , கல்விமான்கள், தொழிலதிபர்களின் பங்கு பற்றுதல்களோடும் இந்நிகழ்வு நடந்தேறியது.
aa
 
இறைநாமத்தை இத்தரணியெங்கும் ஒலிக்கச் செய்யும் முஅத்தினமார் மற்றும் இறையில்லத்தை அலங்கரிக்கும் பணியாளர்களின், உன்னத பணிகள் அதன் பெறுமானங்கள் பற்றியெல்லாம் இங்கு உரை நிகழ்த்திய பலரும் மேடையில் பிரஸ்தாபித்து பேசினர்.
ஆனால் குறிப்பாக முஅத்தின்மார் மற்றும் பணியாளர்கள் எதிர்கொள்கின்ற பொருளாதார பிரச்சினைகளும் கருங்கொடி வெல்பெயா போரமினால் இம்மேடையில் முன்வைக்கப்பட்டு அது தொடர்பாகவும் இது பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவற்றில் சிலவற்றிற்கு தீர்வுகளும் கிடைக்கப்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். 
 
குறிப்பாக பனையறுப்பான் மஸ்ஜிதுல் றகுமான் பள்ளிவாசலில் அதாவது உமர் ஹாஜியாரின் பள்ளிவாசல் என்றழைக்கப்ப டும் அந்த பள்ளிவாசலில் கடந்த ஒரு வருட காலமாக எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் கடைமையாற்றி வரும் எம்.ஏ. அப்துல் மஜீட் என்ற ஒரு இறை அழைப்பாளருக்கு இந்க நிகழ்வை கண்டுகளித்துக்கொண்டிருந்த ஒரு தனவந்தர் சுயமாக வந்து இவருக்கான மாதாந்த கொடுப்பனவை அவர் வழங்க ஒப்புதல் வழங்கியமை இந்நிகழ்வின் வெற்றி என குறிப்பிடலாம் இப்படி இன்னும் சில தனவந்தர்கள் முஅத்தின், பணியாளர்களுக்கான உதவும் நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
img_9569
 
மொத்தத்தில் குறிப்பிடுவதாயின் கருங்கொடி வெல்பெயா போரமின் இப்படியான செயற்பாடுகள் சமூகத்தளத்தில் இருக்கின்ற எல்லா மட்டத்துடையோருக்கும் உந்து சக்தியாகவும் – பேசும் தளமாகவும் இன்று மாறி வருவதோடு எதிர்காலத்தில் கருங்கொடி வெல்பெயா போரம் அக்கறைப்பற்றின் அனைத்து வகைகளிலும் சிறிய மாற்றத்தைத் தானும் கொண்டுவரும் என பரவலாக நம்பப்படுகிறது. 
மேலும் கருங்கொடி மகுட நிகழ்வு அக்கரைப்பற்றில் வசிக்கின்ற அனைத்து தரப்பினராலும் வெகுவாக பாராட்டப்பட்டும் வருகின்றது. 
 
இதன் அடுத்த கட்ட நிகழ்வாக மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை என்பவற்றில் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கான ஊக்குவிப்பு நிகழ்வினையும் அதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்றில் உள்ள உச்சந்தொட்டவர்களுக்கான உன்னத கௌரவம் – கருங்கொடி மகுட விருது வழங்கல் நிகழ்வும் இடம் பெறுவதற்கான வேலைப்பாடுகள் முன்னெடுத்து வருகிறது. 
aqq
 
கருங்கொடி வெல்பெயா போரமை அக்கரைப்பற்று மக்கள் நமக்கான ஒரு சமூக சேவை அமைப்பாக கட்டி வளர்க்க வேண்டும். அதற்காக அனுசரனை வழங்கும் தமீம் உள்ளிட்ட அனைத்து உள்ளங்களையும் இவ்வேளையில் மனதார பாராட்டுவோம்.