ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் பிர­தி­நி­தி­கள் சம­கா­ல பிரச்சினைகள் குறித்து எடுத்துரைப்பு

 

முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் நேற்று மாலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் விஷேட சந்­திப்­பொன்றை நடத்தி முஸ்­லிம்கள் சம­கா­லத்தில் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்பில் எடுத்­து­ரைத்­தனர்.  

நேற்று மாலை 4:30 இற்கு ஆரம்­ப­மான இச்­சந்­திப்பு 40 நிமி­டங்கள் வரை நீடித்­தது. 

முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அஸாத் சாலியின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற இந்த சந்­திப்பில், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், வை.எம்.எம்.ஏ., அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம், ஜமா­அத்தே இஸ்­லாமி, மேமன் சங்கம் மற்றும் ஷபாப் அமைப்பு உள்­ளிட்ட சிவில் அமைப்­புகள் கலந்து கொண்­டன.

சந்­திப்பின் ஆரம்­பத்தில் உரை­யாற்­றிய  அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, முன்னர் கல்வி அமைச்­ச­ராக சுசில் பிரேம ஜயந்த இருந்த காலத்தில் இலங்கை முஸ்­லிம்­களின் கல்விப் பிரச்­சி­னைகள் குறித்­த­தான அறிக்­கை­யொன்றை தயா­ரித்து வழங்­கி­யி­ருந்தோம்.

அந்த அறிக்­கைக்கு என்ன நடந்­தது என்­பது பற்றி தற்­போது தெரி­யா­துள்­ளது. அந்த அறிக்­கையில் இலங்கை முஸ்­லிம்கள் கல்­வியில் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்த விப­ரங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் அதனை தீர்த்து வைப்­ப­தற்­கான பரிந்­து­ரை­க­ளையும் அதில் உள்­ள­டக்­கி­யி­ருக்­கிறோம்.

எனவே அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வழி­ச­மைக்­கு­மாறு வேண்டிக் கொண்டார். 

இங்கு கருத்து தெரி­வித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன், கொழும்பு முஸ்­லிம்­களின் கல்வி மட்டம் குறித்து தெளிவு­ப­டுத்­தி­னார். 

அத்­துடன் பாட­சா­லை­களின் கல்வித் தரம் குறைந்த மட்­டத்தில் காணப்­ப­டு­வ­தா­கவும் கொழும்பு 12 இல் அமைந்­துள்ள ஹமீத் அல் ஹுஸை­னிய்யா தேசிய பாட­சா­லையின் தற்­போ­தைய நிலை மற்றும் ஆசி­ரியர் பற்­றாக்­குறை பற்­றியும் எடுத்­து­ரைத்தார். 

இதன்­போது குறிக்­கிட்ட ஜனா­தி­பதி,  ஹமீத் அல் ஹுஸை­னியா பாட­சா­லையின் நிலை­மைகள் குறித்து தான் அறிந்­துள்­ள­தாக தெரி­வித்­த­தோடு கொழும்­பி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லைகள் குறித்து கவலை வெளி­யிட்டார். 

அத்­துடன் மேலும் கருத்து தெரி­வித்த முஸ்லிம் கவுன்சில் தலைவர், வடக்கு மாகாண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம், அக்­க­ரைப்­பற்றில் சவூதி அர­சாங்­கத்­தினால் அமைத்­துக்­கொ­டுக்­கப்­பட்ட நுரைச்­சோலை சுனாமி வீட்­டுத்­திட்டம் குறித்தும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்தார். 

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி இங்கு கருத்து வெளி­யி­டு­கையில்,  கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தீவி­ர­மாக வெறுப்பு பிரச்­சா­ரங்கள் முன்­னெ­டுக்கப்­பட்­டன.

தற்­போது அவை தணிந்­தி­ருந்­தாலும் மீண்டும் அவ்­வா­றான வெறுப்பு பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களை கடும்­போக்­கா­ளர்கள் ஆரம்­பித்­துள்­ளனர்.  

குறிப்­பாக சமூக ஊட­கங்­களின் வாயி­லாக இந்த வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் பேச்­சுக்கள் அதி­க­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இது கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.  சிங்­கப்­பூ­ரி­லுள்ள வெறுப்புப் பேச்­சுக்கு எதி­ரான சடத்­தத்தை போன்­ற­தொரு சட்­ட­மொன்று எமது நாட்­டிலும் உரு­வாக்­கப்­படல் வேண்டும்.

அத்­துடன் நாட்டில் ஏற்­க­னவே இருக்­கின்ற இனங்­க­ளுக்கு எதி­ரான கருத்­து­களை தடை­செய்யும் சட்­டங்கள் அமுல்­ப­டுத்­தப்­பட்டால் வெறுப்புப் பிரச்­சா­ரத்தை குறைக்­கலாம் என்றார். 

முன்னாள் மாகாண சபை உறுப்­பினர் அஸாத் ­சாலி , தெஹி­வளை பாத்­தியா மாவத்தை பள்­ளி­வாசல், கிரேண்ட்பாஸ் பள்­ளி­வாசல், தம்­புள்ளை ஹைரிய்யா பள்­ளி­வாசல், கண்டி லைன் பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றின் பிரச்­சி­னை­களை நீங்கள் தலை­யிட்டு தீர்த்துத் தர வேண்டும் என ஜன­தி­ப­தி­யிடம் வேண்­டுகோள் விடுத்தார்.
 
தென்­மா­காண முஸ்­லிம்­க­ளுக்கு கல்வி ரீதியில் வளங்­களை பகிர்ந்­த­ளித்தல்,  ஆசி­ரியர் நிய­ம­னத்தில் பார­பட்சம் காட்­டுதல் உள்­ளிட்ட பல சவால்கள் குறித்த மகஜர் ஒன்றை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளன செய­லாளர் அஜ்­வதீன் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்தார். 

அத்­துடன், உலமா சபை உறுப்­பினர் முர்ஷித் முளப்பர், முஸ்லிம் கவுன்­ஸிலின் பிரதித் தலைவர் ஹல்மி அஹ­மட் ஆகி­யோரும் இங்கு கருத்­துக்­களை வெளி­யிட்­டனர். 

முஸ்­லிம்­களின் தொழில்­வாய்ப்­புகள், மௌலவி ஆசி­ரியர் நிய­மனம், ஆசி­ரியர் நிய­மனம் மற்றும் இட­மாற்றம் உள்­ளிட்ட பல விட­யங்­களும் இங்கு பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டன.

சக­ல­ரின் கருத்­து­க­ளையும் அவ­தா­ன­மாக செவி­ம­டுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கும் மேற்­ப­டி  பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். 

அத்துடன் தனது மேலதிக செயலாளர் இவ்விடயங்களில் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைப்பார் என்றும் ஜனா­தி­பதி இதன்­போது முஸ்லிம் சிவில் சமூ­க பிர­தி­நி­தி­க­ளிடம் உறுதி­ய­ளித்­­தமை குறிப்­பி­டத்­­தக்­க­து.