பஷீர் மிரட்டல் , தாருஸ்ஸலாம் குறித்து முறை­யான பதில் தேவை இன்றேல் ஆவ­ணங்­களை மக்கள் முன் வெளியி­டு­வேன்

எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம் காங்கிரஸ் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் அறிக்­கை,

basheer  cegu slmc
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸலாம் உட்­பட கட்­சியின் சொத்து விப­ரங்கள் தொடர்பில் தான் ஏலவே கடிதம் மூலம் எழுப்­பி­யுள்ள கேள்­வி­க­ளுக்கு கட்சித் தலை­மையும் பொறுப்பு வாய்ந்­தோரும் முறை­யாக பதி­ல­ளிக்க  வேண்டும் எனக் கோரி­யுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் , பதில்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மா­ன­தாக இல்­லா­த­வி­டத்து தன்­னி­ட­முள்ள ஆவ­ணங்­க­ளையும், கட்சிச் சொத்­துக்கள் தொடர்பில் இலங்­கையின் உயர் சட்ட நிபு­ணர்­களின் கருத்­துக்­க­ளையும் 
வெளி­யிட்டு மக்­களே பதில்­களைத் தீர்­மா­னிக்­கும்­படி செய்வேன்  என தெரி­வித்­துள்ளார். 

இந்த விவ­காரம் தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­வது,  இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் கட்­சியின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸலாம் பற்­றியும், சொத்­துக்கள் பற்­றியும் நான் தலை­வ­ரிடம் எழுப்­பி­யி­ருந்த கேள்­விகள் தொடர்­பாக எவ்­வித பதில்­களும் தரப்­ப­டாத நிலையில் மூன்று வலு­வற்ற பதில் கேள்­வி­களும், ஓர் அர்த்­த­மற்ற அபிப்­பி­ரா­யமும் மக்கள் அரங்­கத்தில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

இத்­தனை காலமும் தாருஸ்­ஸலாம் பற்­றிய கேள்­வி­களை ஏன் கேட்­க­வில்லை, இந்தப் பரம இர­க­சி­யங்கள் இத்­தனை காலங்கள் எங்கு மறைந்து கிடந்­தன, ஒரே­ய­டி­யாக புற்­றுக்­குள்­ளி­ருந்து இத்­தனை பாம்­புகள் எவ்­வாறு வெளி­வந்­தன ஆகிய மூன்று கேள்­வி­களும், எந்தக் கேள்­வி­க­ளுக்கும் பதி­ல­ளித்து நாம் நேரத்தை வீண­டிக்கத் தேவை­யில்லை என்ற கருத்­துமே முன்­வைக்­கப்­பட்­ட­வை­க­ளாகும். 

தலைவர் அஷ்ரஃப் மர­ண­ம­டைந்த காலம் தொட்டு 2015ஆம் ஆண்டு வரை தாருஸ்­ஸலாம்  சொத்­துக்கள் பற்­றிய வினாக்கள் கேட்­கப்­பட்டே வந்­துள்­ளன.

ஆனால் இன்று தென்­படும் அள­வுக்கு கட்சித் சொத்­துக்கள் தொடர்­பான விப­ரங்கள் தெளி­வாக கட்சி உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளுக்கோ, பொது­மக்­க­ளுக்கோ தெரிந்­தி­ருக்­க­வில்லை.

அந்தக் கட்சிச் சொத்­துக்­களில் தனி­நபர் ஒரு­வரின் தலை­யீடு கார­ண­மாக சிக்­கல்கள் இருக்­கின்­றன, அஷ்­ரஃபின் மர­ணத்­தோடு அவை கள­வா­டப்­பட்டு ஏதோ புற்­றுக்குள் ஒளித்­து­வைக்­கப்­பட்­டுள்­ளன என்றே பொதுத்­த­ளத்தில் அபிப்­பி­ரா­யங்கள் நிலவி வந்­தன. 

தாருஸ்­ஸலாம் பற்­றியும், கட்­சியின் சொத்­துக்கள் பற்­றியும் முழுத்­த­க­வலும் தெரிந்­தி­ருந்­த­வரும், அஷ்­ரஃ­போடு இணைந்து லோட்டஸ் என்ற நம்­பிக்கை நிதி­யத்தின் யாப்பை வரைந்­த­வரும், கட்சித் சொத்­துக்­களின் உறு­தி­க­ளையும் தலை­வரின் தனிப்­பட்ட சொத்­துக்­களின் உரி­மைiயும், தலை­வரின் சில கம்­பனிப் பங்­கு­க­ளையும் நிதி­யத்­தோடு இணைப்­ப­தற்கு சட்ட ஆலோ­ச­க­ரு­மாக விளங்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சட்­டத்­த­ரணி சல்­மா­னுக்கே இவ்­வி­டயம் சம்­பந்­த­மான தக­வல்­களும், இந்தச் சிக்­கலை முடி­வு­றுத்­து­வ­தற்­கான மார்க்­கங்­களும் தெரிந்­தி­ருந்­தன.

தெரிந்­தி­ருந்த இரு­வரில் ஒரு­வ­ரான தலைவர் அஷ்ரஃப் மர­ணித்­ததன் பின்னர் சொத்­துக்கள் பற்­றிய விளக்­கங்­களை மக்­க­ளுக்குப் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்­டி­யதும், கட்சிச் சொத்­துக்­களை மீட்­ப­தற்­கான சட்ட வழி­மு­றை­களைக் கையாண்­டி­ருக்க வேண்­டி­யதும் சல்­மா­னையும், சல்மான் வழங்­கிய தக­வல்­க­ளி­னூ­டாக அனைத்து இர­க­சி­யங்­க­ளையும் அன்றே தெரிந்­தி­ருந்த இன்­றைய தலைவர் ரவூப் ஹக்­கீ­மை­யுமே சாரும்.

இவ்­வி­ரு­வரும் இவ்­வி­ர­க­சி­யங்­களை 16 வரு­டங்­க­ளாக வெளி­யி­டா­தி­ருந்­த­துதான் இவ்­வ­ளவு காலமும் தாருஸ்­ஸலாம் பற்­றிய கேள்­வி­களைக் கேட்க முடி­யா­தி­ருந்­த­மைக்கும், தற்­போது கேட்க நேர்ந்­தி­ருப்­ப­தற்கும் பிர­தான கார­ண­மாகும். 

2015.10.15 அன்று கட்­சியின் பிரதித் தவி­சா­ளரும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்­களின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான நயீ­முல்லாஹ் தலை­மையில் 12 உச்­ச­பீட உறுப்­பி­னர்கள் கையெ­ழுத்­திட்டு அனைத்து உச்­ச­பீட உறுப்­பி­னர்­க­ளுக்கும் பிர­தி­யிட்டு கட்சித் தலைமைக் கட்­டிடம் சம்­பந்­த­மான விப­ரங்­களை  அதி­யுச்­ச­பீ­டத்­திற்குச் சமர்ப்­பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்­பட்ட கடி­தத்தின் பின்­னர்தான் இவ்­வி­டயம் பற்றி ஆராய வேண்டும் என்று முடி­வெ­டுத்தேன்.

இவ்­வு­றுப்­பி­னர்­களின் கேள்­வி­க­ளுக்கு உச்­ச­பீடக் கூட்­டத்தில் சல்­மானும் தலை­வரும் பதி­ல­ளித்­த­போது அப்­ப­தில்கள் என்­னையும் இன்னும் சில உறுப்­பி­னர்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்­தா­மையைத் தொடர்ந்து, சொத்­துக்கள் தொடர்­பான ஆவ­ணங்­களை தீவி­ர­மாகத் தேடத் தொடங்­கினேன். சவால்­க­ளுக்கு மத்­தி­யி­லான 8 மாதங்கள் தொடர்ந்த தேடலில் ஆவ­ணங்கள் அனைத்­தையும் பெற்­றுக்­கொண்டேன்.

இவ் ஆவ­ணங்­களை ஆராய்ந்­த­போது அவற்றில் காணக்­கி­டைத்த உண்­மைகள் இத்­தனை காலமும் தவி­சா­ள­ராக இருந்த என்­னையே ஆச்­ச­ரி­யத்­துக்­குள்­ளாக்­கி­யது. எனவே கிடைக்­கப்­பெற்ற ஆவ­ணங்­களை ஆதா­ர­மாக வைத்துக் கொண்டு ஏற்­க­னவே 12 உறுப்­பி­னர்­களால் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளை­வி­டவும் காத்­தி­ர­மான 12 கேள்வித் தொகு­தி­களைத் தயா­ரித்­தி­ருந்தேன். 

இக்­கேள்­வி­களை எழுப்ப ஏன் இவ்­வ­ளவு காலம் எடுத்­தது என்­ப­தையும் இந்தப் பரம இர­க­சி­யங்கள் ஏன் மறைந்து கிடந்­தன என்­ப­தையும், ஒரே­ய­டி­யாக புற்­றுக்­குள்­ளி­ருந்து இத்­தனை பாம்­புகள் எவ்­வாறு வெளி­வந்­தன என்­ப­தையும் மக்கள் புரிந்து கொள்­வார்கள் என்று நம்­பு­கிறேன்.

அதே­நேரம் இத்­தனை காலங்­க­ளாக ஏன் இந்தக் கேள்­விகள் கேட்­கப்­ப­ட­வில்லை என்று கேட்­ப­வர்கள் கேள்­விகள் கேட்­கப்­பட்­டும்­கூட உரிய பதில்கள் தரப்­ப­டாது இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தையும், திசை­தி­ருப்பும் வகை­யி­லான கருத்­துக்­களே பதிவு செய்­யப்­பட்டு வரு­கின்­றன என்­ப­தையும் கவ­னிக்­க­வேண்டும்.

கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்து நேரத்தை வீண­டிக்க வேண்­டி­ய­தில்லை என்­ப­தா­னது மேலோட்­ட­மான பார்­வையில் இர­சிக்­கும்­ப­டி­யாக இருந்­தாலும், கட்சி ஒன்றின் தலைவர் உறுப்­பி­னர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கவும்,ர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், கட்சி தொடர்பான விபரங்களைப் பகிரங்கப்படுத்தவும் கடமைபட்டவர் என்பதையும், அது அவரது பொறுப்புகளில் ஒன்றென்பதையும் தலைவர் மறந்துவிட்டார் என்பது மட்டுமல்ல சொத்து விபரங்களை மறைப்பதற்கு பொடுபோக்குத்தனமாகக் கருத்துப் பரிமாறி தப்பிப்பதையுமே தெளிவுபடுத்துகின்றது.  

இனிமேலும் எனது கேள்விக்கான பதில்கள் மேடை உளறல்களாக அல்லது தகுந்த உத்தியோகபூர்வமானதாக இல்லாதவிடத்து என்னிடமுள்ள ஆவணங்களையும், கட்சிச் சொத்துக்கள் தொடர்பான இலங்கையின் உயர் சட்ட நிபுணர்களின் கருத்துக்களையும் வெளியிட்டு மக்களே பதில்களைத் தீர்மானிக்கும்படி செய்வேன் என்பதைக் கூறிவைக்க விரும்புகிறேன்.