ஹேரத் ஹெட்ரிக் உதவியுடன் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 206 ஓட்டங்கள் முன்னிலை

CRICKET-SRI-AUS

 

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில்  அவுஸ்திரேலிய அணி 106 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

ரங்கன ஹேரத் தனது முதலாவது டெஸ்ட் ஹெட்ரிக்கை இன்று காலி சர்வதேச மைதானத்தில் பதிவு செய்துள்ளார்.

இலங்கை அணியின் நுவான் சொய்சாவிற்கு பிறகு டெஸ்ட் போட்டியொன்றில் ஹெட்ரிக் பதிவு செய்த வீரராக ஹேரத் பதிவாகியுள்ளார்.

இதேவேளை இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் டெஸ்ட் போட்டியில் பெற்ற முதல் ஹெட்ரிக்காக இந்த ஹெட்ரிக் பதிவாகியுள்ளது.

249049

அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்சல் மார்ஷ் 26 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணி சார்பில் ஹேரத் மற்றும் தில்ருவான் பெரேரா தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

அவுஸ்திரேலியாவின் இந்த ஓட்ட இலக்கானது, இலங்கையில் வைத்து அவுஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த இன்னிங்ஸ் ஓட்டங்களாக பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு கண்டியில் வைத்து 120 ஓட்டங்களை பெற்றதே அவுஸ்திரேலிய அணியின் மிக குறைந்த ஓட்டமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு  35 ஓட்டங்களை பெற்றுள்ளது தற்போது ஆடுகளத்தில் குசல் பெரேரா மற்றும் மத்தியூஸ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் ஆடுகளத்தில் ஆடி வருகின்றனர் .